உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.

அப்பாத்துரையம் - 37

நம்மவரிடத்தில் இரக்கம் காட்டுதல் வேண்டும் அன்றோ?” என்று அறிவுரை பல கூறினாள்.

கல் கரைந்தாலும் கரையும்; ஷைலாக்கின் மனம் கரைய வல்லதோ? “பத்திரத்தின்படி பெறவேண்டியதைப் பெறுதலே நான் காட்டும் இரக்கம்,” என்று அவன் சொன்னான்.

போர்ஷியா பஸானியோவைப் பார்த்து, “வாங்கிய கடனைக் கொடுக்க அந்தோனியாவிடம் பணம் இல்லையே?” என்று கேட்டாள். ஒன்பதினாயிரம் பொன் கொண்டுவந்து ஷைலாக் எதிரில் பஸானியோ வைத்தான். அந்தக் கல்நெஞ்சன் அதை வாங்க மறுத்து விட்டான். பஸானியோ போர்ஷியாவை நோக்கி “வழக்கறிஞர் அவர்களே! தாங்கள் என் நண்பன் உயிரை எவ்வாறேனும் காத்தருளல் வேண்டும்", என்று வேண்டிக் கொண்டான். இதைக்கேட்ட போர்ஷியா, “சட்டப்படி நடந்தே ஆகவேண்டும். சட்டமே பெரியது; உன் வேண்டுகோள் பெரியதன்று,” என்று மறுத்துப் பேசினாள். பஸானியோ இதைக் கேட்டு வருந்த, ஷைலாக் பெருமகிழ்ச்சியோடு வழக்கறிஞரைப் பாராட்டிப் பேசினான்.

போர்ஷியா மீண்டும்

ஷைலாக்கை நோக்கி,

“இப்பத்திரத்தில் கண்ட கெடுநாள் கடந்தது உண்மையே. ஓர் இராத்தல் தசையை நீ அறுத்து எடுத்துக்கொள்ளலாம்,” என்று கூறினாள்: அந்தோனியோவை நோக்கி "ஐயா, உனது உடம்பிலிருந்து ஓர் இராத்தல் தசை அறுத்து எடுத்துக்கொள்ள ஷைலாக்குக்கு உரிமை உண்டு”. என்றாள். ஷைலாக் ஒரு கத்தியை எடுத்துத் தீட்டினான். அப்போது, "நீ ஏதேனும் சொல்லவேண்டுமானால் சொல்லுக," என்று போர்ஷியா அந்தோனியோவுக்குக் கூறினாள். “நான் கூறவேண்டியது ஒன்றும் இல்லை; சாவதற்குச் சித்தமாக இருக்கிறேன்,' என்று அந்தோனியோ போர்ஷியாவுக்கு மறுமொழி கூறினான். பஸானியோவை நோக்கி, “அருமை நண்ப நலமுற வாழ்வாயாக. உனக்காக நான் துன்புற்றேன் என்று நீ கவலைப்பட வேண்டாம். உன் துணைவியிடம் என்னைப் பற்றியும் நம்மிடையே இருந்த நட்பைப்பற்றியும் சொல்லுக”, என்று சில சொற்கள் கூறினான்.

""

ச்சொற்கள் பஸானியோவின் செவியில் புகுந்தன. அவன் மனம் உருகியது. "தோழ! உன்னைக் காப்பாற்றுவதற்காக, என்