உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

17

மனைவியையும் என் உயிரையும் இழக்கச் சித்தமாக இருக்கின்றேன். ஆனால், இந்தக் கொடியவன் மனம் மாற வில்லையே,” என்று வருத்தத்தோடு பேசினான். இப் பேச்சைப் போர்ஷியா கேட்டு வியந்தாள். "ஐயா! இங்கு உன்னுடைய மனைவி இருந்தால் இப்படிச் சொல்லியிருக்க முடியுமா?" என்று பஸானியோவைப் பார்த்துச் சொன்னாள்.

5. ஷைலாக் தோல்வியுறல்

அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் வழக்கின் முடிவைக் கவலையோடு எதிர்நோக்கியிருந்தார்கள். ஷைலாக், "நேரமாகின்றதே”, என்று அவசரப்பட்டான். போர்ஷியா அவனை நோக்கி, “ஓர் இராத்தல் தசை நிறுக்க நிறைகோல் வேண்டும்; அந்தோனியோவின் உடலிலிருந்து இரத்தம் மிகுதியாக வெளியானால், உயிர் நீங்கும். ஆகையால், இங்கே மருத்துவர் ஒருவர் இருக்கவேண்டும்”, என்று கூறினாள். “பத்திரத்தில் அப்படி ஒன்றும் குறிப்பிடவில்லையே? என்று யூதன் மறுத்துச் சொன்னான். “பத்திரத்தில் குறிக்காவிட்டால் என்ன? அறம் கருதியாவது அந்த உதவி செய்தல் வேண்டாவா?” என்று போர்ஷியா கேட்டாள். “பத்திரத்தில் உள்ளதே அறம், மற்றதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை,” என்று அவன் செருக்கோடு கூறினான்.

"அப்படியா? நல்லது. சட்டம் இடந்தருகிறது. முறை மன்றமும் ஒப்புக் கொள்கிறது.ஓர் இராத்தல் தசையை நீ அறுத்து எடுத்துக்கொள்ளலாம்," என்று அப்போது போர்ஷியா கூறினாள். ஷைலாக் களித்தான். “அந்தோனியோ! வா, உன் மார்பைக் காட்டு." என்று கையில் கத்தி கொண்டவனாய் அந்தோனியோவை அழைத்தான். அச்சமயத்தில், “ஷைலாக், பொறு; பத்திரத்தில் குறித்தபடியே நீ பெறுவாய். இதில் ஒருதுளி ரத்தமும் குறிக்கவில்லை. ஓர் இராத்தல் தசை தவிர, கிறித்தவன் இரத்தம் ஒரு துளி சிந்தினாலும் உனது செல்வம் முழுவதும் அரசியலார் பறிமுதல் செய்துவிடுவர்,” என்று போர்ஷியா கூறினாள். இதைக் கேட்டதும் ஷைலாக் விழித்தான்; தன் எண்ணம் நிறைவேறாது என்று அறிந்து மருண்டான். ஆனால், அங்கிருந்தோரும் அரசனும் வழக்கறிஞர் திறமையை வியந்து வாழ்த்தினர்.