உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

66

அப்பாத்துரையம் – 37

ஐயா, எனக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டால் அதுவே போதும்," என்று வாடிய முகத்துடன் ஷைலாக் கேட்டான். பஸானியோ பணங்கொடுக்க முன்வந்தான். ஆனால், போர்ஷியா தடுத்தாள். அவள் ஷைலாக்கை நோக்கி, மீண்டும் பின்வருமாறு கூறினாள். “ஷைலாக்! பத்திரத்தில் குறித்தபடியே நீ பெற வேண்டும். ஓர் இராத்தல் தசையை அறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஒரு துளி இரத்தமும் சிந்தக்கூடாது. அது மட்டுமன்று. நீ அறுக்கும் தசை ஓர் இராத்தலுக்கு மிகுதலும் கூடாது; குறைதலும் கூடாது; மிகுந்தாலும் அல்லது குறைந்தாலும் உன் உயிரே போய் விடும்; உன் செல்வமெல்லாம் இழந்து விடுவாய்,” இம்மொழிகளைக் கேட்ட ஷைலாக், “என் பணத்தைக் கொடுத்தால் போதும்; நான் போய்விடுவேன்," என்று வேண்டினான். அப்போது பஸானியோ பணங்கொடுக்க முன்வந்தான்; ஷைலாக் அதைப் பெற்றுக்கொள்ளச் சென்றான்; ஆனால், போர்ஷியா தடுத்தாள்.

"யூத! பொறு; உன்னை எளிதில் விடமுடியாது. நீ வெனிஸ் குடிகளுள் ஒருவன் உயிரைப் போக்க முயன்றாய்; இது மிகப்பெரிய குற்றம். அதனால், உன் செல்வம் எல்லாம் இழந்துவிட்டாய்; அச்செல்வம் அரசியலார்க்குச் சேர்ந்ததாயிற்று. உன் உயிரையும் நீ இழக்கவேண்டும். ஆனால், அதைக் குறித்து நீ அரசர் பெருமானிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்,” என்று போர்ஷியா ஷைலாக்கை நோக்கிக் கூறினாள்.

அப்போது அரசன், “ஷைலாக்! கிறித்தவர்கள் இரக்க முயைடவர்கள். நான் கிறித்துவனாகையால், உனக்கு மன்னிப்பு அளிக்கின்றேன். உன் செல்வத்தில் ஒரு பகுதி அரசியலார்க்கும், ஒரு பகுதி அந்தோனியோவுக்கும் சேரும்,” என்றான். இதை அறிந்த அந்தோனியோ, "ஷைலாக்கின் செல்வம் எனக்கு வேண்டாம். இவனுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் தனியே பிரிந்து சென்று ஒரு கிறித்தவனை மணந்தாள். அவளுக்கு இந்தப் பகுதி சேர்வதாக," என்று கூறினான்.

யூதனுக்கு வேறு வழி இல்லை. அவன் எல்லாவற்றுக்கும் உடன்பட்டான், “என் உடல் நலமாக இல்லை; நான் வீட்டுக்குப்

""

போகவேண்டும். என்று விடைதருமாறு மன்னனை

வேண்டினான். "யூத! நீ இனியேனும் இரக்கமுள்ளவனாக