உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ||-

அப்பாத்துரையம் – 37

""

வீட்டிற்குள் நுழைந்ததும், "போர்ஷியா! இவர்தாம் நம்முடைய நண்பர் - உயிர்த்தோழர் அந்தோனியோ,” என்று அந்தோனி யோவைத் தன் மனைவிக்கு அறிமுகப்படுத்தினான். எல்லோரும் கூடி மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்தனர். அதற்கிடையே, கிராஷியானோ நெரிஸா இருவர்க்கும் ஒரு சச்சரவு நிகழ்ந்தது. "இவள் திருமணத்தின் போது கொடுத்த கணையாழி எங்கே என்று கேட்கிறாள். அதை வழிக்கறிஞருடன் வந்தவருக்குக் கொடுத்ததாகச் சொன்னேன். அதை எப்படிப் பிரிந்தீர்? என்று இவள் கேட்கிறாள். வேறொன்றும் இல்லை, என்று கிராஷியானோ கூறினான். “உயிருள்ள வரைக்கும் அதைப் பிரிவதில்லை என்று அவர் உரைத்த சூள் பொய்த்து விட்டது. அதை வேறொரு பெண்ணுக்குத்தான் கொடுத்திருப்பார். அதை நான் அறிவேன்,” என்றாள் நெரிஸா. “இல்லை இல்லை. உன் அளவு உயரமுள்ள ஓர் ஆண்மகனுக்கே அதை நான் கொடுத்தேன். இஃது உண்மை. அந்தோனியோவின் அருமையான உயிரைக் காப்பாற்றினார் அந்தச் சிறந்த வழக்கறிஞர். அந்த உதவியை நாம் மறக்கலாமா! அவருடன் வந்தவர் என் கணையாழியைக் கேட்ட போது, கொடுக்கமாட்டேன் என்று மறுப்பது தகுதியா?" என்று கிராஷியானோ உண்மையை உரைத்தான்.

இவற்றைக் கேட்ட போர்ஷியா கிராஷியானோவை நோக்கி, “நீ செய்தது குற்றமே. உன் மனைவி அளித்த கணை யாழியை நீ பிரிந்தது குற்றமே. என் காதலர் அவ்வாறு ஒரு காலும் செய்ய இசையார், என்று கூறினாள். உடனே கிராஷியானோ, 'அம்மையே! அவர்தாம் முதலில் வழக்கறிஞர்க்குத் தமது கணையாழியைக் கொடுத்தார். அவரைப் பின்பற்றியே நானும் அவ்வாறு செய்தேன்”, என்றான்.

66

போர்ஷியா சினங்கொண்டவள் போல், "அவரும் அவ்வாறு செய்தாரா? அப்படியானால், நெரிஸா கூறுவது உண்மையே. ஒரு பெண்ணுக்கு அவரும் அதைக் கொடுத்திருக்கக் கூடும்," என்று பஸானியோவை வெறுத்துக் கூறினாள். பஸானியோ அப்போது உற்ற வருத்தம் பெரிது. “உன் மன னதைப் புண்படுத்திவிட்டதற்காக நான் மிகவும் வருந்துகின்றேன். அந்த வழக்கறிஞர் நமக்குச் செய்த அரிய உதவிக்காக நான் மூவாயிரம் பொன் தர முயன்றேன். அவர் அதைப் பெற மறுத்துவிட்டு அந்தக்