உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

21

கணையாழியையே கேட்டார். நீ அங்கே இருந்திருந்தால், அதைக் கொடுத்து விடுமாறு நீயே வற்புறுத்தியிருப்பாய்,” என்று அவன் போர்ஷியாவைப் பார்த்துக் கூறினான். “அந்தோ! இவ்வளவு துன்பங்களுக்கும் காரணமாக உள்ளவன் நான்தானே,” என்று அந்தோனியோ வருந்தினான்.

“உன்

"தாங்கள் ஒன்றும் அதற்காக வருந்தவேண்டா," என்று போர்ஷியா அந்தோனியோவுக்குக் கூறினாள். கணவனுக்காக நான் எனது உடலையே ஈடு கொடுத்தேன். என்னைக் காப்பாற்றிய அறிஞர்க்குத் தன் மோதிரத்தை அவன் கொடுத்தான். இனி என்றும் உன் கணவன் இத்தகைய தவறு செய்யான் என்று உறுதி கூறுகிறேன்," என்று அந்தோனியோ சொன்னான். “தங்கள் உறுதி மொழி நன்று; இக்கணையாழியை அவர்க்குக் கொடுங்கள்; இதையேனும் போற்றி வைத்திருக்குமாறு கூறுங்கள்,” என்று சொல்லி, அந்தக் கணையாழியையே அவள் அந்தோனியோ கையில் கொடுத்தாள். பஸானியோ அதைக் கண்டான் “தான் வழக்கறிஞர்க்குக் கொடுத்த கணையாழி போர்ஷியாவிடம் எவ்வாறு வந்து சேர்ந்தது,” என்று எண்ணி எண்ணி வியந்தான். அப்போது போர்ஷியா உண்மையைக் கூறினாள்; அந்தோனியோவும் பஸானியோவும் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. தன் மனைவியின் அறிவையும், ஆற்றலையும் பஸானியோ பலவாறு போற்றிப் புகழ்ந்து பாராட்டினான்.

அப்போது,போர்ஷியா தன் கையிலிருந்த சில கடிதங்களை அந்தோனியோவிடம் கொடுத்தாள். அவற்றில், அவனுடைய கப்பல்களைப் பற்றிய செய்தி இருந்தது. கப்பல்கள் அழியவில்லை என்றும் எல்லாம் வெனிஸ் வந்து சேர்ந்துவிட்டன என்றும், அவை தெரிவித்தன. இச்செய்தியை அறிந்த அனைவரும் அளவில உவகை அடைந்தனர்.

தங்களை இன்னார் என்று அறிந்துகொள்ளாமல் வழக்கறிஞர் என்றும், அவருடன் வந்தவர் என்றும் எண்ணிப் புகழ்ந்த கொழுநரைக் குறித்துப் போர்ஷியாவும் நெரிஸாவும் நகைத்து நகைத்து மகிழ்ந்தார்கள். ஆண் உடை உடுத்து முறைமன்றம் எய்தித் தங்களால் முடியாத அருஞ்செயலை முடிப்பித்த மனைவியரைக் குறித்துப் பஸானியோவும்