உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

அப்பாத்துரையம் - 39

கிட்டிற்று. ஆகவே அதன் அருமையும் மதிப்பும் இன்னும் மிகுந்தன. மிகவே அதனை இழந்துவிடாமல் பாதுகாக்கும் எண்ணத்துடன் அவன் அதில் ஒரு தொளையிட்டு அதனைக் கயிற்றில் கோத்துக் கழுத்திலோ கையிலோ கட்டிக்கொண்டான். இவ்வகையாகத்தான் வரலாற்றுக்கெட்டாத காலத்தில் பகுத்தறிவின் உதவியால் நாம் புனைந்து உருப்படுத்திக் கொள்ளவேண்டிய பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்து பண்டைய மனிதன் பொன்னை முதன்முதலில் கண்டு பூணாக வழங்கியிருக்கவேண்டும்.

இன்றும் ஆற்றோரங்களில் மணலில் காலையிளங் கதிரொளியிலோ மாலையிலோ உலவுபவர் கண்ணை அதே நுண்பொடி மயக்குவதுண்டு. இன்றும் குழந்தைகள் அதனை எடுக்க முயல்வதுண்டு. ஆனால் மனிதன் உள்ளம் இன்னும் குழந்தையுள்ளமாயிராததனால் அதில் அவன் தன் உள்ளத்தைப் பறிகொடுப்பதில்லை. அதைக் குழந்தைகளின் விளையாட்டிற்கே விட்டுவிடுகிறான். ஆயினும் இன்றும் ஆங்காங்குத் தற்செயலாக முன்போல மணிக்கற்கள் அகப்படாமலில்லை. அதோடு 'பல துளி பெரு வெள்ளம்' என்ற உண்மையை நடைமுறையறிவால் அறிந்த தொழிலாளர் பலர், கையில் குழிந்தகன்ற இரும்புத் தட்டங்களையோ ஓடுகளையோ கொண்டு ஆற்றோரங்களிலோ அல்லது நீர் கட்டிக்கிடக்கும் இடங்களிலோ உள்ள மண்ணைத் தோண்டியெடுத்துக் கரைத்துக் கரைத்துக் கொட்டுவதை பலர் இன்றுங் காணலாம். இவர்கள்தான் உலகின் முதல் பொன் தேட்டாளர்களை நினைவூட்டும் அவர்கள் கால்வழியினர் ஆவர். ஆனால் இவர்கள் பெரும்பாலும் ஏழைகள். எப்போதும் ரேமாதிரியாக உழைப்புக் கேற்ற பயன்பெறாது இவர்கள் என்றேனும் பிறர் கண்ணுறுத்தும் வெற்றி பெற்று அதன் ஒருநாட் கவர்ச்சியால் பலநாள் அல்லலுறுவோராவர். பொன் தேட்டத்தின் புதுமுறைகளையும் அது பற்றிய புதுச்செய்தி களையும் அறிந்தால் இவர்களும் பிறநாட்டுத் தேட்டாளர்கள் போல் பெருஞ்செல்வம் ஈட்டுதல் கூடும்.

ஆற்றின்நீர் விரைவாக ஓடுமிடங்களில் பொன்னும் பிற பொருள்களும் ஒருங்கே அடித்துச் செல்லப்படும். விரைவு குறைந்த இடத்தில் படிப்படியாக எடை மிகுந்தவை கீழே தங்கும்.