உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

27

பிற பொருள்கள் எல்லாவற்றையும்விடத் தங்கம் எடை மிகுதியுடையதானதால் விரைவு குறைந்தவுடன் முதலில் தங்குவது தங்கமேயாகும். இதனால் ஆறு சட்டெனத் திரும்பும் இடங்களிலும், அகலம் மிகுதியாகும் இடங்களுக்குச் சற்று முன்னும் இதனை எதிர்பார்க்கலாம்.

மண்ணினுள்ளும் எடை மிகுதியான பொருள் கீழும் எடை குறைந்தவை மேலும் இருப்பதனால், தேட்டாளர் மேற்பரப்பில் தேடிவிட்டு மனம் நிறை வடையக்கூடாது. ஆழ்ந்து தோண்டிக் கடும்பாறை காணுமிடம்வரைத் தேடவேண்டும்.

கடும்பாறையில் எங்கேனும் தங்கம் இருப்பதாகக் கண்டால், தேட்டாளர்கள், அது, ஆற்றில் கரைந்துவருந் தங்கமன்று.பொன் வேர்களின் பகுதியே என்றறிந்து அதனைத் தொடர்ந்தகழ்ந்து, நெடுநாள் பழக்கத்தால் பொன் எத்தகைய இடங்களில் குறைந்த முயற்சியில் நிறைந்து அகப்படும் என்று அறிவர்.

முதன்முதலாக இந் நுண்பொடிகள் ஆற்றுமணலில் எப்படி வந்தன. ஆற்றில் அவை காணப்படுவானேன், எவ்வெவ்விடங் களில் எவ்வெவ்வளவில் காணப்படும்; எத்தகைய முயற்சிகளால் அவற்றை எளிதில் பெறலாம் என்ற செய்திகளை ஆராய்வோம்.

உண்மையில் பொன் இயற்கையில் பல இடங்களிலும்

பரந்து காணப்படுகிறது. ஆனால் எல்லா இடங்களிலும் அது தனித்துப் பிரித்தெடுக்க முடிகிற அளவிலும் நிலையிலும் இல்லை. வான வெளியிற்கூட மிகக் குறைந்த அளவு பொன் இருக்கக்கூடும் என்று எண்ணப்படுகிறது. கடல்நீரில் பத்துக் கோடிப் பங்கில் 5 பங்களவு முதல் 267 பங்களவுவரை பொன்கலப்பு உள்ளதாம். கடல் முற்றிலுமுள்ள பொன்னைப் பிரித்தெடுக்க முடிந்தால் அஃது ஓராயிரம்கோடி டன்கள் எடையுள்ளதாயிருக்கும் என அறிஞர் மென்டலியெவ் (Mendeleyev) கணக்கிட்டிருக்கின்றார். பிரித்தெடுக்கக் கூடாததாயிருக்கின்றது. பல ஆறுகளிலுள்ள நீரிலும் மிகக்குறைந்த அளவு பொன் கலப்பு இருப்பதாக எண்ணப்படுகிறது. இருபுறமும் கா விரித்துச் செல்லுவதனால் காவிரி எனப் பெயர்பெற்ற தமிழ்நாட்டு ஆற்றுக்கு அதில் பொன் கலப்பு உண்டு என்ற குறிப்பினாலேயே தமிழர் பொன்னி எனப்

ஆனால் இது