உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

181

பாற்பசுக்களும், காளைகளும், ஆட்டுமந்தையும், சேவலும், கோழியும் ஏராளமாக இருந்தன. தாயும் மகனும் சோம்பல் சிறிதுமின்றி நன்றாக உழைத்து வந்தனர். பாலும் தயிரும் வெண்ணெயும் நெய்யும் உள்ள பானைகளை அடுக்கிக்கொண்டு, மலையழகன் பக்கத்து ஊர்களுக்கு விற்கச் செல்லும்போது, ஊர்ப்பெண்கள் எல்லாரும் அவன் அழகைக் கண்டு வியந்து மயங்கி நிற்பார்கள். "இவன் எந்தப் புண்ணியவதியை மணப்பானோ, அவள் என்ன பாக்கியம் செய்தவளோ," என்று அம்மங்கையர் ஒருவரோடொருவர் பேசி மனம் பொருமுவார்கள்.

மலை அழகனுக்கு வயது ஒன்றும் அப்படி ஆகிவிட

வில்லை; பதினெட்டு வயதுகூட நிரம்பியிராத அவன் தனக்கு வாய்க்கப் போகும் மனைவியைப் பற்றிச் சிறிது கூட எண்ணிப் பார்த்ததே கிடையாது. பெண்களைப் பார்ப்பதில் அவனுக்கு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்தது. அதிலும் அவ்வூர் நாட்டாண்மைக்காரர் மகளைப் பார்க்க அவன் ஆசைப் படாமலும் இல்லை. அவள் தான் எவ்வளவு அழகு! அதற்கு ஈடு சொல்வதற்குக் கதையையும் கற்பனையையும்தான் துணை கொள்ள வேண்டும். அவ்வளவு எழிலுடன் விளங்கிய அந்த இளமங்கைக்கும் அவனைக் காண்பதற்கு ஆவலாகத்தானிருந்தது. மலையழகன் தன்மீது அதிகப்படியான கருத்துச் செலுத்துவதும் அவளுக்குத் தெரியத்தான் செய்யும். எனவே, அவள் உள்ளப் பூரிப்புக்குக் கேட்பானேன்! மலையழகன் அத்தெருவழியாகப் போகும் நேரத்தில் எல்லாம் அவளும் ஏதோ வேலை செய்வதாகப் போக்குக் காட்டிக் கொண்டு தன்வீட்டு முன்மாடியில் வந்து நிற்பாள். மாடியில் வைத்திருந்த சம்பங்கிச் செடிக்குத் தண்ணீர் வார்த்துக்கொண்டே தெருவில் போகும் அந்த அழகு இளைஞனைக் கண்குளிரக் கண்டு மகிழ்வாள்.

வெயில்காலத்தில் ஒவ்வொரு நாளும் காலையில் மலையழகன் அவனுடைய பசுக்களையும் ஆடுகளையும் கடம்பவனத்தருகில் உள்ள புல்வெளிக்கு இட்டுச் சென்று மேய விடுவான். அங்கே அவை விருப்பம் போல் புல் தின்று காலாறிக் கொண்டிருக்கையில், அவன் மரநிழலில் மலர்கள் படிந்து மெத்தென்றிருக்கும் புல்தரையில் படுத்துக்கொண்டு, மேலே தெளிந்த வானத்தில் கழுகும் பருந்தும் வல்லூறும் வைரியும் வட்டமிடுவதைக் கண்டு களித்திருப்பான்.