உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

ஆ, என்காதல் ஓர் செக்கச் சிவந்த செவ்வல்லி ஆர்வமுறச் சித்திரையிற் பூத்திடும் அதன் பொலிவு ஆ, என்காதல் ஒரு செவிக்கினிய யாழின் பண்

அரிய புதிய செல்வழிகள் ஆக்கிப் பொழியும் ஆங்கதுவே.

7

கவிஞர் பர்ன்ஸ் ஒருவரை ஒருவர் கவர்ந்தீர்ப்பதிலும் ஒருவருடன் ஒருவரை ஆரப்பிணைப்பதிலும் முறுக்குற்று வரிந்து சுற்றும் நாண்போன்ற காதலைப்போல, எந்த வடமும் எந்த ஆழ்வடமும் (Cable) அவ்வளவு வலியதாகாது.

கருத்தெலாம், உணர்வெலாம், களிப்பெலாம் மெய்யில்

உருத்தெழும் ஆற்ற லவையெலாம் காதல்

வர்ட்டன்

குருத்தெழும் உணர்வில் அடங்கி அதன்அழல்

திருத்துவ தன்றித்தம் செயலெதும் இலவே.

காலரிட்ஜ்

என் காதலுக்குரிய மாதின் நல்லாதரவும் உதவியும் இன்றி, நான் மன்னனென்ற முறையில் என் பொறுப்புக்களை வகிக்கவும், என் கடமைகளை நிறைவேற்றவும் எள்ளளவும் முடியாதவ னாயிருக்கிறேன்.

வின்ட்சர் கோமகன்

ஆடவன் முதலில் காதலையே காதலித்து, நாளடைவில் பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால் பெண்டிரோ முதலில் ஆடவனைக் காதலித்து, இறுதியில் காதலைக் காதலிக்கிறாள். ரெமி-டி-கூர்மாண்ட்

ஒரு ஆடவனுடன் நேசமாயிருக்க வேண்டுமானால், அவனை நன்கு உணரவேண்டும்; ஒரு சிறிது அன்பு செலுத்தவும் வேண்டும்; ஆனால் ஒரு பெண்ணுடன் நேசமாயிருக்க வேண்டுமானால், அவளை நிரம்ப நேசிக்க வேண்டும்; ஒரு சிறிதும் உணர முயலவே கூடாது!

ஹெலென் ரோலண்டு