8
||-
அப்பாத்துரையம் - 41
மனிதன் காதலிப்பது சிறிதளவு, ஆனால் அடிக்கடி: பெண்டிர் காதலிப்பது பெரிதளவு, ஆனால் அருகலாக.
நம் முதற்காதலும் கடைசிக் காதலும் தற்காதல்தான்!
பஸ்டா
எல்லாம்
மயாலீ
காதல் என்பது ஃபிரான்ஸில் ஒரு களி நாடகம்; இங்கிலாந்தில் ஒரு துயர் நாடகம்; இத்தாலியில் ஒரு நாடகம்; ஜெர்மனியில் ஒரு சோக நாடகம்.
சை
மார்கரட் பிளலிங்டன்
4. சுவடிகள்
நூல்கள் வாசிப்பதில் எனக்குள்ள அடக்க முடியாத ஆவலை, இந்தியாவின் எழிலார்ந்த செல்வமுற்றும் கொடுத்தாலும், நான் கைவிட ஒருப்படேன்.
எட்வர்டு கிப்பன்
ஒரு பூண்டின் வாழ்வுக்கால முழு வளர்ச்சியின் பயனை ஒரு சிறுபுட்டி நன்மருந்து நமக்கு வேண்டும்போது தரக் காத்திருப்பது போல, ஒரு சிறந்த அறிஞன் முழு வாழ்வின் பயனை ஒரு நூல் நமக்கு வேண்டும்போது தரக் காத்துக் கொண்டிருக்கிறது.
மில்ட்டன்
சட்டைப் பையிலிட்டுக்கொண்டே செல்லக் கூடிய ஒரு சிறிய பூந்தோட்டம்- அதுதான் ஏட்டுச் சுவடி
சீனப் பழமொழி
சுவை பார்க்கத்தக்க ஏடுகளும் உண்டு; விழுங்கத்தக்க ஏடுகளும் உண்டு; மென்று சுவைத்துச் செரிமானம் செய்ய வேண்டிய ஏடுகளும் உண்டு.
பிரான்சிஸ் பேக்கன்