உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

107

கருத்து ஏற்படுவதற்குக் காரணம் உண்டு. அறிவு நாடி உடல் நலம் திருத்தும் வாய்ப்பு உழைப்பாளிரினத்துக்கு இருப்பதில்லை. ஆனால், அவர்கள் உழைப்பு அவர்களுக்கு உடல் நலம் தந்து விடுகிறது. அதே சமயம் அறிவுநாடி உளந்திருத்தும் வாய்ப்பு உள்ளவர்கள் பெரும்பாலும் உழைப்பதில்லை. ஆகவே அவர்கள் உடல்நல முடையவரா யிருப்பதில்லை. சமூகத்தின் இவ்விரு குறைபாடுகளின் பயனாகவே உடல்நலம் வேறு, அறிவு நலம் அல்லது உளநலம் வேறு என்ற எண்ணம் பொதுவாகத் தோன்றியுள்ளது.

ஆனால், உண்மையில் உடல் நலத்துக்கும் உள நலத்துக்கும் நெருங்கிய இன்றியமையாத் தொடர்பு உண்டு. அறிவு நாடி உள நலம் திருத்தும் வாய்ப்புடையவர் உழையாததால் உடல் நலத்தை மட்டும் கடுத்துக்கொள்ள வில்லை. உள நலத்தையும் ஓரளவுதான் பெறுகின்றனர். பெற்ற உள நலம் புத்தறுவு நலனாக வளர உடல் நலம் இடந்தராமல் போகிறது. அது போலவே உழைப்பாளர் அறிவு நல வாய்ப்பில்லாமல் போவதால், அறிவு நலம் மட்டும் இழக்கவில்லை. உடல் நலமும் அவர்கள் ஓரளவே பெறுகின்றனர். உடல் நலத்துடன் உள நலம் அறிவு நலமும் கூடிய முழு அறிவு நலத்தையும். அதன் பயனாக உண்மையான உளநலம், அறிவு நலம் ஆகிய புதுச்சிந்தனை யாற்றலையும் உழைப்பவரினம், உழையாத இனம் ஆகிய இரண்டு இனங்களும் அடையாது போகின்றனர்.

உழைக்கும் இனத்தில் பிறந்து, ஓரளவு அதன் வாய்ப் பெல்லை கடந்து, அறிவு நலம் நாடி உளம் திருந்தும் வாய்ப் புடைய நடுத்தர வகுப்பினரே மட்டான உடல் நலம், உள நலம் இரண்டும் பெற்று முழு வாழ்வு நலம் அல்லது நாகரிகப் பண்பை வளர்க்கின்றனர்.

உழையாது உடல்பேணுபவர் அறிவுநலம் குன்றுவர். அதேசமயம் அறிவு பேணாது உழைத்து உடல் பேணுபவரும், அறிவு குன்றிருப்பர்.மனிதர் எல்லோருக்கும் உடலுழைப்பே போல், அறிவுழைப்பும் இன்றியமையாத தேவையாகும். உண்மையில் அறிவு உடல் உறுப்பின் ஒன்றாகிய மூளையின் திறமேயாகும். மற்ற உறுப்புகள் போல் இது புற இயக்கம் உடையதாயிராமல், குடல் முதலிய உறுப்புகள் போலச் செயலாற்றுகின்றது. உடலின்