உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

129

தனிமனிதன் தனிப் பண்புகள், செல்வம் சமூகத்தினால் பிறப்பிக்கப்படுவது; சமூகத்தில் மட்டுமே விலையுடையது; சமூகத்தை வளர்ப்பதைத் தவிர வேறு எப்பயனும் உண்மையில் உண்டுபண்ண முடியாதது. இன்று செல்வத்தைத் தமதெனத் துய்ப்போர், தம் இனத்தையும் கெடுத்துத் தம்மையும் கெடுப்பவரே யாவர். அவர்களுக்கு மேலுலகில் பழி உண்டோ இல்லையோ, இவ்வுலகில் தோல்வி ஏற்படுவது உறுதி. உழைக்காததால் உடல் வலியின்மையும், நோயும், அதன் பயனாக அறிவு வலிவின்மையும் குறுகிய வாணாளும் இயற்கை அவர்கட்குத்தரும் தண்டனைகள். செல்வர் இத் தண்டனைகளின் மூலம் இயற்கை தரும் எச்சரிக்கைகளைக் கவனியாதிருந்தால், இயற்கை அவர்கள் சமூகத்தையே அழித்து விடுகிறது.ஏனெனில், இத்தகைய தற்கொலைப் பண்பாளர் பொறுப்பற்றவராகு மிடத்தில், அப்பொறுப்புச் சமூகத்தினிடம் போய்விடுகிறது.

தனிமனிதன் தன்னோடொத்த தனிமனிதர்கள் அனைவரையும் அளாவும் வகையில், இரு வகையான தொடர்புகளைக் காணலாம். சிலர் எல்லா மனிதரும் நல்லவர் என்ற அடிப்படையில் பரிமாறுகிறார்கள். தீயவர் எனத் தெளியப்பட்டாலன்றி அவர்களை வெறுக்கவோ, ஒதுக்கவோ செய்யமாட்டார்கள். வேறு சிலர் எல்லா மனிதரும் தீயவர் என்ற அடிப்படையில் பரிமாறுகிறார்கள். தனிப்பட்ட நல்லவர் என்றோ, தமக்கன்புடையோர் என்றோ, தெளிவுபட்டால் மட்டுமே நட்பாடுவர். இவ் விருதிறப் பரிமாற்றங்களில் முன்னதே நாகரிக மனிதனுக்கு உரியது. ஆயினும், தீமையும் இயல்பாகக் காணப்படுவதாலாலும், தீமை நன்மை போன்று பற்பல உருவிலும் நடமாடுவதுண்டாதலாலும், தனி மனிதன் எப்போதும்

விழிப்பாகவே இருக்கக்கடவன்.

எல்லோரையும் தீயவரென்று எண்ணுபவன் வாழ்க்கையில் தீமையச்சம் ஓர் எச்சரிக்கை தரும் விதிவிலக்காயிராமல், நிலையான விதியாய் அவன் வாழ்விலேயே வெறுப்புப் பண்பைப் பெருக்கும். வாழ்க்கையில் குடும்ப முதலிய பல படிப்படியான விரிந்த எல்லைகளும், அவனுக்குப் படிப்படியான மிகுதி வறுப்புக்குரியனவாகவே அமையக் கூடும். இவ் வெறுப்பு வெறுப்பை ஊட்டு மாதலால், அவன் வாழ்க்கை ஒரு நரகமாகவே