130
அப்பாத்துரையம் – 43
அமையத் தக்கதாய்விடும். நேர்மாறாகப் படிப்படியாக உலகை நோக்கி அன்பு மிகுந்து, அதே சமயம் படிப்படியாகத் தன்னை நோக்கி அன்புக் கடமை மிகுதியாய் இருப்பதே இயற்கை வாழ்வு ஆகும்.
அன்புக்கு அடுத்தபடியான வாழ்க்கைப் பண்பு வாய்மையாகும். அன்பு கூட்டுறவை உண்டாக்குகிறதெனில், வாய்மை அதனைக் காக்கிறது. வாய்மை யென்பது சொல்லில் உண்மை, அல்லது மனத்தில் உண்மை, அல்லது செயலில் தவறாமை என்பதை மட்டுமல்ல; இம்மூன்று திறங்களிலும் எல்லாச் செயல்களும் எண்ணங்களும் பேச்சுகளும் ஒன்றுக்கொன்று பொருந்தியிருக்க வேண்டும் என்பதே. குறிப்பிட்ட காரணமும் நன்னோக்கமுமின்றி, வாய்மையிலிருந்து ஒருவன் வழுவக்கூடாது.
“பொய்மையும் வாய்மை யிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்
99
இவ்
(குறள். 292)
என வள்ளுவர் கூறியது இதனாலேயேயாகும். வாழ்க்கையில் நோக்க முடையவர்க்கே இவ் வாய்மையும் அமையவல்லது; பொய்ம்மையும் வாழ்க்கையாக அமையவல்ல நோக்கத்தின் வழியாகத் தற்பண்பும், வாழ்க்கைத் திட்டமும் அமைகின்றன. இவற்றால், தனி மனிதனிடம் சமூகத்தவர் நம்பிக்கை வளர்கிறது.
பல கடமைகள் வந்து முட்டும்போது மனிதன் அக் கடமைகளுள் முதலுரிமையுடையதனையே முதன்மையாகக் கொள்ளல் வேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட கடமைதான் முதலுரிமையுடையது என்று எவரும் பொதுவாக வகுக்க முடியாது. சமூகத்தின் பொது நோக்கப்படியே சமூகம் இதனை வகுக்குமாயினும், தனி மனிதன் பண்புடன் சமூகப் பண்பு ஒத்துப்போவது உறுதி. கடமைகள் போலவே தீமைகள் வகையிலும் விலக்கமுடியாதவிடத்தில், மனிதன் பெருந் தீமையை நீக்கிச் சிறு தீமையையே மேற்கொள்ளல் வேண்டும். பிற மனிதர்களை மதிப்பிடும் போதும், விலக்கவோ வெறுக்கவோ செய்யும்போதும் இது போலவே ஒருவர் குணம் குற்றம் இருசார்பும் ஆராய்ந்து, குணம் மிகையானால் குணத்தாலும், குற்றம் மிகையானால் குற்றத்தாலும் மதிப்பிட வேண்டும்.