திருநிறை ஆற்றல்
225
அன்பமைதி எல்லாக் கீழ்க் குணங்களையும் உயர் குணங்க ளாக மாற்றிவிடும். தனிமனிதனை இனத்தோடு இணைப் பதன் மூலம் மனிதன் தனித் தன்னலத்தின் சூழலின் ஏற்படும் வாழ்க்கையின் எல்லாச் சிக்கல்களையும் அது தீர்த்துவிடும். இத்தகைய அமைதி இல்லாவிடத்தில் மனிதன் அலை கடல்புயலில் மிதக்கும் ஒரு துரும்பு ஆவான். எந்தச் சிற்றலை யும் அவனை நிலைகுலைத்து அலைக்கழியச் செய்யும். அமைதி மட்டும் இருந்தால், பேரலைகள் கூட அவன்மீது தாவிச் சென்றுவிடும்.
மனிதன் உண்மைப் பகையாவதெல்லாம் உட்பகையே. அது உண்மையில் அவன் உள்ளத்தின் புறப்பகுதியாகிய தன்னலப் பகுதியே. இது அதன் நிலையான பகுதியன்று, அடிக்கடி மாறக்கூடும் பகுதி. எளிதில் அதை மாற்றியமைக்கவும் கூடும். எளிதில் மாறிவிடாத உட்பகுதியே சமூக உள்ளமாகிய அன்புப்பகுதி. புறமனத்தை இவ்வன்புப் பகுதியின் ஆட்சிமூலம் இயக்கிவிட்டால், புறமனத்தின் பகைமை மாறிவிடும். அது உள்ளத்திற்கோர் அரணாய்விடும். சிந்தனை புறமனத்தையும் அகமனத்தின் அன்பமைதியில் தோய வைத்து, அதனையும் அதன் வாயிலாகப் புறப்பொருளுலகையும் இயக்கும். அவாக்கள் என்னும் சிற்றலைகள் புறமனத்தின் பரப்பில் எழுந்து புறப் பொருள்களின் கவர்ச்சியால் புயலாகு முன்பே, உள்ளமைதி அவ்வலைகளை அமைதிப்படுத்தி விடுகிறது. துன்பங்கள் புற மனத்தைத் தீண்டுமுன்பே, அக அமைதி அவற்றை எதிர்த்து நிற்கும் உரத்தை அளித்தும், அத்துன்பங்களையே சாதனமான படிப்பினைகளாக்கியும் உதவுகிறது.
ன்ப
ஆழ்ந்த சிந்தனை பொருள்களின் பண்புகளையும் காரண காரியங்களையும் தொடர்புகளையும் காட்டி, பொருளுலகு ஒரே அமைதியுடைய ஒருமையுலகு என்பதை விளங்க வைக்கிறது. புறஉலகில் அது மெய்ப்பித்துக் காட்டும் அமைதியே அகத்திலும் அமை
மைதி உண்டுபண்ணக் காரணமாயிருக்கும். புறஉலகில் பொருள்கள் யாவுமே ஒன்றுடனொன்று காரண காரியமா யிருப்பதுபோல, அதுபற்றிய உன் அறிவும் ஒருகூறுடன் ஒரு கூறு தொடர்புடையதாய், காரணகாரிய இணைப்புப் பெற்று, ஒரே முழுநிறை மெய்ம்மையின் ஒழுங்குபட்ட உறுப்பமைதியாய் நிலவும்.