(226)
அப்பாத்துரையம் – 43
அக அமைதி இங்ஙனம் உணர்ச்சிக் கொந்தளிப்பற்ற நிலைமட்டுமன்று. அது அறிவு முரண்பாடும் அற்ற முழு நிறை அறிவமைதி ஆகிறது. புறஉலகின் ஒவ்வொரு புதுக் காட்சியும் புத்தனுபவமும் அறிந்த அறிவமைதியுடன் சிந்தனைத் தழலிலிட்டு ஒரே உருவில் உருவாக்கப்பட்டு விடுகின்றது. உணர்ச்சியற்ற அமைதிநிலை சிந்தனைக்கு உதவுவதுபேல சிந்தனைதரும் இவ்வறிவமைதி தீய வாக்களைக் களைந்தொறுப்பதிலும். நல்வாக்களை உருவாக்குவதிலும், நிறைவேற்றுவதிலும் பெரும்பயன் தந்து அமைதியை வளர்க்கிறது. அறிவும் ஆற்றலும் உடைய இவ்வமைதி முழுநிறை வாய்மை, முழுநிறை ஆற்றல், முழுநிறை இன்பம் நோக்கி இடையறாது முன்னேறுகிறது.
அறிவமைதியுடையவன் மதஉணர்ச்சி உடையவனா யிருப்பான்; மதவெறியுடை யவனாயிருக்க மாட்டான்! 'மதவெறிக்கும் மதத்துக்கும் எந்தத்தொடர்புமில்லை' என்பதையும், அது மதத்தைச் சாக்காகக் கொண்டு எழும் கீழ்த்தர மனித உள்ளத்தின் புறமன எழுச்சியே யென்றும் அவன் அறிவான். மதத்தின் கிளை, உட்கிளை, வகை வேறு பாடுகள் ஆகியவை அவனை ஒரு சிறிதும் அலைக்கமாட்டா; அது மட்டுமன்று. வேறுவேறு மதங்களிடையேகூட அவன் பொது நிலையமைதி பேணுபவனாவான். ஒரே பரந்த கடலில் குடா, வளைகுடாக்களெனவே அவன் அவ்வேறுபாடுகளை எண்ணுவான்.
மதவேறுபாட்டைப் போலவே மொழிவேறுபாடு, தேச இனவேறுபாடு, நாகரிகப் பண்பாட்டு வேறுபாடு, பழக்க வழக்க வேறுபாடு ஆகியவற்றிலும் சிந்தனைப் பயிற்சியும் மன அமைதியும் உடையவன் அலைவுற மாட்டான். அவன் தன் மதம், தன்மொழி, தன்தேசம் ஆகியவற்றுக்குத் தன்னல மின்றி உழைப்பான். ஆனால், தன்னலம் தன் சமூகத்தின் ஓர் உறுப்பு என்று அவன் அறிவதுபோலவே, தன்மதம் உலகமத வாழ்வின் ஓர் உறுப்பு, தன்மொழி உலகமொழி வாழ்வின் ஓர் உறுப்பு என்பதையும் அவன் நன்கு ஓர்ந்துணர்வான். எனவே தனக்கு உழைக்கும்போது சமூகத்தில் பிறரை எதிர்க்காமல், அவர்களுக்கும் உதவும் முறையில் உழைப்பதைப் போல, தன்