உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

227

மதம், தன்மொழி ஆகியவற்றுக்கு உழைக்கும் உழைப்பையே உலக மதவாழ்வுக்கும், மொழிவாழ்வுக்கும் உழைக்க வேண்டிய உழைப்பின் ஒரு படியாக அவன் கொள்வான். அவன் சமூகத் தொண்டிலும் முரண்பாடு எதுவும் இடம் பெறாது, எல்லாத் துறையிலும் அவன் விருப்பு வெறுப்புக்கள், உழைப்பு ஆகியவை திட்டமிட்டவையாக அமையும்.

வடமீனைத் தொலைவிலிருந்து பார்ப்பவன் அதன் மெய்யான பாரிய அளவை உய்த்தறியமாட்டான். உறு பேராற்றல் கொண்ட தொலைநோக்கிக் கண்ணாடிகள்கூட அதனை

அணுக்கமாகக்காண

உதவாத அளவு அண்டங்கடந்த பெருந்தொலைவில் அது இருக்கின்றது. ஆனால் மனிதன் காட்சியாற்றல், காட்சிப் பொறியாற்றல் மேம்படுந்தோறும், அதன் பருமன், ஆக்கம், பண்பு ஆகியவற்றைப் பற்றிய அறிவு வளர்ந்துகொண்டே போகும் என்பது உறுதி. ஆயினும் வடமீனின் திசை, அதன் தொலை ஆகியவற்றைப் பற்றிய மட்டில், தொடக்கத்திலிருந்தே பார்ப்பவன் அறிவு மாறா அறிவாயிருக் கின்றது. இதுபோலவேதான் மெய்ம்மையை நாடி முயல்பவன் நிலையும் அமைந்துள்ளது. முழுநிறை மெய்ம்மை அவனிட மிருந்து எவ்வளவோ நெடுந்தொலைவில் தான் இருக்கிறது. அதன் எல்லையற்ற பாரிய அளவை அவன் இன்று அளந்தறிய முடியாது. ஆயினும் அதனை அவன் அகக் கண்கள் நோக்கி விட்டால், அவன் அதை நோக்கிச் செல்வது உறுதி. அது தன் காட்சியளவிலும் பாரிய அளவுடையது என்ற உணர்வு, அதன்திசை ஆகியவை அதை உணர்ந்த நாளிலிருந்தே உறுதிப் படுகின்றன. அவன் முன்னேறிச் செல்லும் ஒவ்வொரு படியும், அதாவது அவன் அடையும் ஒவ்வோர் இன்பதுன்ப நிகழ்ச்சியும், அதன் ஆராவின்பத்தின் நுகர்வைப் பெருக்கிக் கொண்டேதான் இருக்கும்.

சிந்தனை முழுநிறை மெய்ம்மையின் திசையை மட்டுமே காட்டும். அதைநோக்கிச் செல்ல உதவுவது புறப் பொருளுலகில் அவன் கொள்ளும் தொடர்புகளும் செயல் களும் நிகழ்ச்சிகளுமே. இவற்றில் அவன் அடையும் பயிற்சி களும் படிப்பினைகளுமே அவனை அதன் பண்புகளை உணரச் செய்யும்.