உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(228

அப்பாத்துரையம் - 43

சிந்தனை, செயல் ஆகியவற்றின் படிமுறை வளர்ச்சி பற்றிப் புத்தர்பிரான் திருவாய் மலர்ந்தருளி யிருப்பதாவது:-

66

முதலாவது சிந்தனை அன்புச் சிந்தனையாகும். எல்லா உயிர்களின் நலங்களையும் - உன் எதிரிகளென நீ கருதுபவர்களின் நலங்கள் உட்பட எல்லார் நலங்களையும் அவாவும் முறையில் கருத்தைச் செலுத்தி உன் உள்ளத்தை நீ திருத்தி அமைக்க இச் சிந்தனை உதவ வேண்டும்."

"இரண்டாவது சிந்தனை அருளிரக்கச் சிந்தனை ஆகும். எல்லா உயிரினங்களின் துன்பங்களையும் நினைந்து நினைந்து, எல்லா உயிரினங்களின் இன்ப துன்பங்களையும் உன் இன்ப துன்பங்களாகக் கருதி அவற்றுடன் ஒன்றுபட்டுப் படர்ந்த இரக்கத்தால் நீ அருள்நிலை பெற வேண்டும்."

மூ ன் றாவது சிந்தனையாக நீ எல்லா உயிரின் இன்பங்களிலும் கருத்துச் செலுத்தி, அவ்வுயிர்களின் மகிழ்ச்சியை உன் மகிழ்ச்சியாகக் கொண்டு அவற்றின் மீது ஆர்வம் பெருக்கவேண்டும்."

"நான்காவது சிந்தனையாக நீ உன் அகத்திலுள்ள துப்புரவுக் கேடுகள் பற்றியும், உயிரினங்களின் நோய்நொடி சாக்காடு ஆகியவற்றுக்குக் காரணமான துப்புரவுக் கேடுகள், பழிதீங்குகள், ஊழல் உளைச்சல்கள் பற்றியும் கருத்துச்செலுத்தி, அவற்றைக் காரண காரியப்படுத்தியுணர வேண்டும். பரந்த மாபெருந் தீங்குகளுக்கு எவ்வளவு சிறுதிறப்பட்ட போலி ன்பங்கள் காரணம் என்பதனை நீ உணரும் உணர்வு பெறவேண்டும்.

"ஐந்தாவது சிந்தனையே சிந்தனையின் நிறை செல்வம். இன்பதுன்பங்கள், விருப்புவெறுப்புக்கள், ஆதிக்க அடிமைத் தனங்கள், செல்வ வறுமைகள் ஆகியவற்றில் நிலையாமையையும் வெறுமையையும் போலித் தன்மையையும் உணர்ந்து, அவற்றிடையே நீ நடுநிலை வீறமைதி பெறவேண்டும். பிறர்வாழ்வின் இன்பதுன்பங்களைத் தனதாகக் கொண்டு பயிற்சி பெற்ற அமைதி மூலமாகவே, தன் இன்ப துன்பங்களையும், பிறர் இன்ப துன்பங்களாகக் கருதும் பற்றற்ற நிலை எய்தி, அவற்றுக்கு அப்பாற்பட்டு நின்று வாழ்க்கையை வீறமைதியுடன் காணல் வேண்டும்."