உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

(229

புத்தர் பிரானின் சீடர்கள் இப்படிகளின் மூலம் முழு நிறை வாய்மைபற்றிய மெய்யுணர்வை நோக்கிச் சென் றார்கள். நாமும் இதே படிமுறைகளைப் பின்பற்றலாம். அல்லது படிமுறைகளை மாற்றியமைத்துக் கொள்ளலாம். வாய்மையை நோக்கிச் செல்லும்வரை, படிமுறை என்பது

எது

முக்கியமன்று. செல்லும் திசைதான் முக்கியம். அத்துடன் வாய்மை என்னும் அக்குறிக்கோளிலுள்ள நம் ஆர்வம் எந்த அளவு விதிர்விதிர்புடையதாயிருக்கும். நம் நெஞ்சம் அந்த ஆர்வத்திடையே எந்த அளவு அன்பின் மெய் வீரத்தால் விரிவடைகிறதோ, எந்த அளவு நம் தனி நிலைகடந்த பிற உயிரினங்களுடன் பொது முறையில் ஒன்றுபட்டு அகற்சி பெறுகிறதோ அந்த அளவு நம் முன்னேற்றம் நிறைவுடைய தாயிருக்கும்.

கதிரவனொளியைப் பெற்று வளம்பெறும் வண்ணம் கற்கள் வளர்வதில்லை. மரம் செடி கொடிகள்தான் அதை நோக்கி வளரத்தக்க உயிர்ப்பண்பு அஃதாவது, மென்மைப் பண்பும் நெகிழ்ச்சிப் பண்பும் உடையவையாய் இருக்கின்றன. ஆனால் அவற்றிலும் கொப்புகிளைகளை விட இலைகளும் தளிர்களும், அவற்றைவிட மலர்களும் இத்தன்மையை மிகுதியாக உடையன ஆகின்றன. காலையிளம்பரிதியின் இளஞ்சூட்டையும் அமுத நிறக்கதிர்களையும் ஆவலுடன் அள்ளிப் பருகும் வண்ணம் மலர் தன் மெல்லிதழ்ப் பூட்டவிழ்த்து விதிர்விதிர்த்து விரிகின்றது. கதிரொளி உட்புகுவதற்காக இதழ்கள் வழிவிடு கின்றன. இதே முறையில் நீ உன் உள்ளத்தை மலர்போன்ற தூய்மையும் மென்மையும் நெகிழ்வும் உடையதாக்கு. அப்போதுதான் வாய்மையின் அன்பொளி அதனூடு சென்று பரவமுடியும்.

பொதுநல அவாஆர்வமென்னும் அகல்சிறகு விரித்து வானளாவிப் பற. போலி அவாக்கள் எனும் முகிலினங்கள் கண்டு அஞ்சாதே. அவை உள்ளத்துக்குத்தான் அருகே இருக்கின்றன. ஆகவே அவை உன்னைத்தான் வாய்மையாகிய கதிரவனிட மிருந்து மறைக்கின்றனவேயொழிய, இயற்கையாகிய எல்லையற்ற வானிடத்தில் கதிரவனொளி பரவுவதை அவை தடுக்கவில்லை. நிலத்தைப் போர்த்த போர்வையாகிய முகிலினங்கள் அசைந்து