உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 ||

அப்பாத்துரையம் – 43

விலகும்போது அவை உன்னை வந்தடையும். நீ முகிலினங்களைத் தாண்டிப் பறக்கக் கற்றுக் கொண்டால் நீ வேண்டும் போதெல்லாம் அவற்றைக் காணலாம்.

இயற்கையமைதியுடன் ஒன்றிய முழுநிறை இணக்க அமைதி உன்னால் பெறக்கூடிய ஒன்றே என்பதை நீ மனமார நம்பு. கரையற்ற நிறைதூய்மை வாழ்வு வாழமுடியும் என்பதில் நீ திடமான பற்றுறுதி கொள். முழுநிறை வாய்மை உன்னால் எட்டிப் பிடிக்கத் தக்க ஒன்றே என்பதை அசைக்கமுடியாத ஆணிப்பிடியாகப் பிடி. இம் மூன்று நம்பிக்கைகளும் சிந்தனையற்ற மற்ற நம்பிக்கைகளைப் போன்றவையல்ல. ஏனென்றால் அவை சிந்தனையைச் செயலாற்ற வைக்கும் பண்புகள், சிந்தனைக்கும் அவையே தூண்டுதல் தருகின்றன. இந்த நம்பிக்கை உடையவர்கள் குணம் என்னும் கோதிலா ஒளிக்குன்றேறுவர். ஒளிரும் வான் முகட்டில் உயர்ந்து பறப்பர். இந்நம்பிக்கைகள் அற்றவரோ, அடிவாரங்களைச் சுற்றுவர்; இருண்ட குகைகளிலும் ஆழ்கசங்களிலும் உளைந் தழுந்துவர்.

நோக்கம், ஆர்வம், நம்பிக்கை, பற்றுறுதி, அமைதி சிந்தனை ஆகிய இந்தப் படிகளில் ஏறிச்சென்று நீ தெய்விக அன்பு,தெய்விக நேர்மை, தெய்விகத் தூய்மை, தெய்விக அமைதி ஆகிய நற்பண்புகளின் தொகுதியை அடைவாய். இத்தொகுதியே முழுநிறை நன்மை அல்லது கடவுள். இப்பண்புகள் கைவரப் பெற்றவனுக்கு, பழமை என எதுவும் எங்கும் இல்லை. எல்லாம் புதுமையாய், புத்துருவும், புது வடிவும், புது வண்ணமும் உடையவனாய், ஒரே புத்தொளியின் பலதிறப் பண்பாரவாரம் ஆகின்றன. பொருளுலகைப் போர்த்த திண்ணிய போலித் திரை, திண்ண மிக்க ஊனக் கண்களின் காட்சி நமக்கு தரும் போலித் தோற்றமே. மென்மையும் அரிய நுண்ணயமும் உடைய மெய்யார்வ உணர்வுக் கண்களுக்கு அத்திரை மிகவும் மெல்லியதாய், தாள்வலைபோன்று ஒளியூடுருவ வல்லதாய் அமைந்து விடுகிறது. அத்திரை கடந்து பார்வையைச் செலுத்தினால், ஆன்மிக உலகின் உண்மைநிலை தெளிவாகும். திரையின் இப்பாலுள்ள உலகின் இடவேறுபாடு, கால வேறுபாடு, திரைக்கு அப்பால் இருப்பதில்லை. வடிவுருக் களுக்குரிய இடமும் பிறப்பு வளர்ச்சி இறப்பாகிய காலமும்