திருநிறை ஆற்றல்
(231
கடந்த அவ்விடையறா மெய்ம்மையில் கருத்தூன்றிப் புற உலகில் மிதந்து செல்பவரே உயிர்வீடு பெற்றவர் (சீவன் முத்தர்) ஆவர். அவர்களே தேவர்கள் ஆவார்கள்.
66
அறிவுத்தாரகை
கண்ணன் பிறப்பும் கருதுபுத்தர் ஏசுபிரான்
வண்ணப் பிறப்பும் வரவுவணர்த்தும் - விண்ணகத்தின் நுண்மீனொளியே, நுனித்துன்னை நோக்கியவர் எண்மானம் என்னென்றியம்புகேன்? - கண்மயங்கி வையம் துயின்று வளர்நள் ளிரவதனின்
கொய்யும் இருளில் தம் கூர்விழியின் - பொய்யாத உள்ளொளியைக் கண்டார் இதுவியப்பே! - அள்ள அள்ளக் குன்றா அருட்செல்வம் கோவலர் தம்சேரிக்
கன்றினிடை ஏகிக் கனிவுடனே - சென்றங்கே
தங்கி இருந்தான் இதுவும் தரும்மலைப்பே! பொங்கும் இதன்உட் பொருள் கேளீர்:- எங்குமுள்ளான் இங்குமுள்ளான் அங்குமுள்ளான் என்றேத்தும் மெய்ப்பொருளே
எங்கெங்கும் தேடி இடர்பட்டே - தங்கச்
சிலைகள் வடித்தார், செயல் பல செய்தார்,
கலைகள் படித்தார், களைத்தயர்ந் தார்; இந் நிலையில் பயில்நீள் நெறியின் - தொலையாத ஆயா மடமை அதுவே இரவின் இருள்; மேயும் அவாக்கள் விரியா னிரைகளவை தோயும் தொழுவம்; அதனுள்ளே - தோயாது. தொக்குறையும் தூய உயிரே பரமனொளி புக்குறையும் ஏசுபிரான், புத்தன், புகழ்க்கண்ணன்! மிக்கார் அருட்கனிவில் மேவியே - பொய்க்கோலப் போலி மத வாத இருளகற்றிப் போந்திட்ட சில ஒளியின் திகழ்துணையால் - ஞாலத்து எளியார் எளிமையின் இன்கனிவி னூடே தெளிந்தார் இறை உருவம் தேர்ந்து; - தெளிவிலா