உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

||--

அப்பாத்துரையம் - 45

உழைப்பு மதிப்பின் அளவே விலைமதிப்பின் அளவு.

முத்தின் அருமை கடலில் முத்துக் குளிப்பவன் உழைப்பருமை மட்டுமே. வைரத்தின் அருமை. அதைப் பாறையிலிருந்து தேடி எடுத்தும் பட்டையிட்டும் உழைக்கும் உழைப்பின் அருமையேயாகும்.

முளைத்த மதிப்பும் அடங்கிய மதிப்பும்

ஒரு சரக்கை ஒருவன் ஒருமணி நேரத்திலும், மற்றொருவன் ரண்டுமணி நேரத்திலும் செய்யலாம். ஒரு நாட்டார் எளிதாகவும், விரைவாகவும் மற்றொரு நாட்டார் வருந்தியும், தாமதமாகவும் செய்யலாம். ஒரு காலத்தில் அது கடுமையான உழைப்பாகவும் மற்றொரு காலத்தில் அது சுளுவான உழைப்பாகவும் இருக்கலாம். ஆனால் ஒரே காலத்திலும், இடத்திலும், ஒரே சமூகச் சூழலிலும், ஒரு மனிதன் செய்யக்கூடும் சராசரி உழைப்பையே அளவாகக் கொண்டு விலைமதிப்பு அமைக்கப்பெறுகிறது. சமூகமே இம் மதிப்பை வரையறுக்கிறது. ஆனால் சமூகம் இதை அறிவதில்லை. உடலிலுள்ள செரிமான உறுப்புக்கள் வேலை செய்வதை அறியாமலே, நாம் உணவைச் செரிமானம் செய்துகொள்வது போல, சமூகம் தன்னுள் அமைந்த இயற்கைப் போட்டியின் மூலமாகவே இம்மதிப்பைப் பேணிக்காத்து வருகிறது. சமூகத்தின் சமூகத்தின் உள் அமைதிகள் இயற்கையின் அமைதிகள்போல் தாமே இயங்கிச்

செயலாற்றுபவை.

சுலபமான உழைப்பைவிடக் கடுமையான உழைப்பு மிகுதி மதிப்பைத் தரும் என்பது உண்மையே. ஆனாலும் சராசரி உழைப்பை மூல அளவாகக் கொண்டே சமூகம் உழைப்பை அளக்கிறது. நாழியின் சிற்றளவாக உரியும் உழக்கும், அதன் பேரளவாகப் பறையும் கலமும் ஏற்பட்டிருப்பது போல, சராசரி உழைப்பளவின் கூறுகளாகவே எல்லா உழைப்பும் அளக்கப்படும். இது உழைப்பின் நடு (Standard of Unit) அளவைக் கூறு.

உழைப்பின் அளவு உழைப்புக்குப் பிடிக்கும் நேரத்தின் அளவு. இருபது முழம் துணி ஒர் குறிப்பிட்ட சில மணி நேர உழைப்பை அளவாகக் கொண்ட மதிப்பு. ஒரு உடுப்பும் அதே குறிப்பிட்ட மணிநேர உழைப்பை அளவாகக் கொண்டதா