உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

20 முழம் துணி = 1 உடுப்பு

அப்பாத்துரையம் - 45

இந்தப் பேரத்தில் இருபது முழம் துணி உடையவன் அதை ஒர் உடுப்பு உடையவனுக்குக் கொடுக்கிறான். இருபது முழம்

துணி உடை ய முதல் மனிதன் மனிதன் ஏ-க்கு, துணி பயன்

மதிப்புடையதல்ல. ஒன்று அவனுக்குத் துணி வேண்டியதில்லை என்றிருக்கலாம்; அல்லது அவனுக்கு அது வேண்டிய அளவுக்கு மேல் இருக்கலாம். ஆனால் அவனுக்கு ஒர் உடுப்பு வேண்டும். அது அவனுக்குப் பயன்மதிப்பு உடையது. இதுபோலவே ஓர் உடுப்பு உடைய இரண்டாவது மனிதனுக்கு உடுப்பு பயன் மதிப்புடைய தல்ல. துணியே பயன் மதிப்புடையதாயிருக்கிறது.

ஏ-யின் பார்வையில் இந்த பேரத்தில் அவன் பண்டமாற்று மதிப்புடைய உடுப்பை வாங்குகிறான். பி-யின் பார்வையிலும் பேரம் இதேபோன்ற இரு தன்மை உடையதே; ஆனால் இங்கே மதிப்புக்கள் தலைமாறுகின்றன. அவனுக்கு உடுப்புப் பண்டமாற்று மதிப்புடையது. துணி பயன் மதிப்புடையது.

இருபுறமும் எப்படியும் சரக்கு என்ற முறையில் சரக்குகளுக்குப் பயன் மதிப்பு, விலை மதிப்பு ஆகிய இரண்டு மதிப்புகளும் உண்டு. ஆயினும் பேரத்தில் எப்போதும் ஒரு சாராருக்கு ஒரு கோடியில் விலை மதிப்பும், மறு கோடியில் பயன் மதிப்பும் முனைப்பாகின்றன. மறு சாராருக்கு அதற்கு நேர் எதிராக ஒரு கோடியில் பயன் மதிப்பும் மறுகோடியில் விலை மதிப்பும் முனைப்பாகின்றன. எல்லா இடங்களிலும் முனைப்பாயிராத மதிப்பு உள்ளடங்கி மேற்பார்வைக்கு மறைந்திருக்கிறது.

பொருளின் பயன்மதிப்பு வற்புறுத்தப்பட்டு முனைப்பாகும் போது அது சரக்காகிறது! அதன் விலை மதிப்பு வற்புறுத்தப்பட்டு முனைப்பாகும் போது அது விலை மதிப்பீடு அல்லது மதிப்பீடு ஆகக் கருதப்படுகிறது.

மதிப்பீடு

இம்மதிப்பீடு பொருளின் பொருள் தன்மையில் அதாவது பொருண்மையில் இல்லை என்பது தெளிவு. ஏனென்றால், துணியும் உடுப்பும் ஒரே பொருளின் இருவேறு வடிவுகள். மேலும் அவற்றின் விலைமதிப்பு இருவேறு வடிவுகள் ஆயினும் அவற்றின்