உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

9

விலைமதிப்பு இருவேறு அளவில்தான் இருக்கிறது. 20 முழம் துணிக்கு ஒர் உடுப்பு என்ற அளவு வேற்றுமை இதைத் தெளிவாகக் காட்டுகிறது.

இம்மதிப்பீடு பொருளின் வடிவில் இருப்பதாகவும் கூறமுடியாது. ஏனெனில் விலைமதிப்புடைய பொருள்களில் ஒன்றாகிய துணிக்குக் குறிப்பிட்ட வடிவம் கிடையாது. பருமன் அல்லது அளவுமட்டுமே உண்டு. அதே சமயம் உடுப்புக்கு வடிவம் உண்டு. ஆனால் பருமன் அல்லது அளவு வகையில் அது நிலையான ஒரு தன்மை யுடைய தன்று.

அப்படியானால் மதிப்பீட்டின் மெய்யான தன்மை யாது?

ஒரு முக்கோணமும் நாற்கோணமும் ஐங்கோணமும் வடிவில் வேறு பட்டதாயினும் பரப்பளவு என்ற அளவு நிலையில் ஒரே அளவுடையவையா யிருக்கலாம் அல்லவா? வட்ட நாழியும் சதுர நாழியும் நெட்டை நாழியும் குட்டை நாழியும் ஒரே நாழி அளவை உடையவையாயிருப்பதில்லையா? இவ்விடங்களி லெல்லாம் பொருளும் ஒப்பல்ல. வடிவம் ஒப்பல்ல. ஆயினும் வடிவற்ற பொது அளவு ஒப்பே என்று காண்கிறோம். மதிப்பீடும் இது போன்றதே. அது பொருளின் பொருண்மையும் வடிவும் கடந்த ஒரு பொது அளவை மதிப்பு ஆகும். பல வடிவங்களுக்கெற்ப அமையும் நீர்ப்பொருள் அல்லது குழம்புப் பொருள் போன்ற ஓர் அளவெல்லையாக அதை நாம் கற்பனை செய்தல் கூடும்.

மதிப்பீட்டின் தன்மை யாது? அதில் மாறுபாடு ஏற்படுவது எதனால்? எவ்வாறு ஏற்படுகிறது?

பயன்மதிப்பு தனிப்பட மதிப்பீடு தராது. உழைப்பு மதிப்பு மட்டுமே மதிப்பீடு தரும். ஆனால் பயன் மதிப்பு ல்லாத உழைப்பு என்றும் மதிப் புடையதாகாது.பயனுடைய உழைப்பை மட்டுமே சமூகம் மதிக்கிறது. அத்துடன் மதிப்பீடு உழைப்பின் அளவைப் பொறுத்ததானாலும், அவ்வுழைப்பின் அளவு சமூகத்தின் கால இடச்சூழல்களைப் பொறுத்தே கணிக்கப்படும். அந்தந்தச் சூழலில் அந்தந்தச் சமூகம் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அவசியமாகக் கருதும் சராசரி உழைப்பின் அளவையே அந்நேரத்துக்குரிய பொது அளவாகக் கருதும். அதாவது சமூக