உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

||--

அப்பாத்துரையம் - 45

முறையில் அவசியமான உழைப்பின் அளவே' அந்த உழைப்பின் பொது அளவுக் கூறு ஆகும்.

பயன்மதிப்புக் குறையும்போது தேவை குறைகிறது. உழைப்பின் மதிப்பும் குறைகிறது. பயன்மதிப்புக் கூடும்போது உழைப்பின் மதிப்பும் உயர்கிறது. அதே சமயம் சமூக முறையில் உழைப்பின் அவசியம் குறையும்போது, போட்டி காரணமாக ஏற்படும் குறைந்த அளவு உழைப்பே, உழைப்பு மதிப்பாவதால், உழைப்பின் மதிப்புக் குறைகிறது.

மதிப்பீட்டின் உயர்வு தாழ்வுகளுக்குக் காரணம் இதுவே.

மதிப்பீடு உயர்வு பெறும்போதும் தாழ்வு பெறும்போதும், அதற் கேற்ப விலையும் உயர்வும் தாழ்வும் பெறும். ஆனால் மதிப்பீடு தாழ்வு பெறும்போதுதான், விலை உயர்வு தாழ்வு பெற வேண்டுமென்றில்லை. இது தவிர வேறு மூன்று வகைகளில் விலை உயர்வு அல்லது தாழ்வு மாறுபாடு ஏற்படுகிறது.

(1) துணி, உடுப்பு ஆகிய இரு சரக்குகளில் உடுப்பின் மதிப்பீடு மாறாமல், துணியின் மதிப்பீடு மட்டும் உயர்வு தாழ்வடைந்தால், துணியின் விலை அதற்கேற்ப உயர்வுக் கெதிராகத் தாழ்வும், தாழ்வுக்கெதிராக உயர்வும் பெறும். பேரத்தில் இந்நிலை துணி மதிப்பீட்டின் உயர்வில் 20 முழம் துணி = 2 உடுப்பு அதாவது 10 முழம் துணி = 1 உடுப்பு, என்றும், அதன் தாழ்வில் 40 முழம் துணி = 1 உடுப்பு அதாவது 20 முழம் துணி='/, உடுப்பு என்றும் மாறுபடும்.

2

(2) துணி, உடுப்பு ஆகிய இரு சரக்குகளில் துணியின் மதிப்பீடு மாறுபடாமல், உடுப்பின் மதிப்பீடு மட்டும் உயர்வு தாழ்வு பெறுமானால், உடுப்பின் விலை உயர்வுக்கேற்பத் தாழ்வும், தாழ்வுக் கெதிராக உயர்வும் பெறும். பேரத்தில் இந்நிலை உடுப்பு மதிப்பீட்டின் உயர்வில் 40 முழம் துணி = 1 உடுப்பு அதாவது 20 முழம் துணி='/, உடுப்பு என்றும் அதன் தாழ்வில்10 முழம் துணி =1 உடுப்பு அதாவது 20 முழம் துணி = 2 உடுப்பு என்றும் மாறுபடும்.

2

(3) துணி, உடுப்பு ஆகிய இரண்டுமே சரிசம அளவில் உயர்வுற்றால், அல்லது தாழ்வுற்றால், பேரத்தில் உயர்வு தாழ்வின் அடையாளம் எதையும் பார்க்க முடியாது. பிற பொருள்களின் பண்டமாற்று விகிதத்திலிருந்தோ, அல்லது சரக்குகளின்