உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

11

புழக்கமிகுதி அல்லது குறைபாட்டிலிருந்தோதான் இரு சரக்குகளின் உயர்வு தாழ்வுகளையும் காணமுடியும்.

சரிசம அளவின்றி இரண்டு சரக்குகளின் மதிப்பீடுகளும் ஒருங்கே உயரவோ அல்லது தாழவோ செய்தால், இரண்டிற்கும் பொதுவான உயர்வு அல்லது தாழ்வு அதாவது குறைந்த உயர்வு தாழ்வு பேரத்தின் மாறுதலில் தோற்றம் பெறாது. இரண்டு சரக்குகளின் உயர்வு தாழ்வுகளிடையேயுள்ள வேற்றுமையே செயலாற்றும்.

(4) துணி, உடுப்பு ஆகிய இரு சரக்குகளின் மதிப்பீட்டிலும் ஒன்று உயர்ந்தும் மற்றொன்று தாழ்ந்தால் பேரத்தில் இரு கோடிகளுக்குமிடையே யுள்ள தொல்லை இன்னும் மிகுதியாகும். துணி இரட்டிப்பு உயர்ந்து, உடுப்பு பாதியாகக் குறைந்தால், 20 முழம் துணி=1உடுப்பு என்பது 10 முழம் துணி = 2 உடுப்பு ஆகவும்; துணி பாதியாகக் குறைந்து உடுப்பு இரட்டிப்பாக உயர்ந்தால் அது 40 முழம் துணி ='/ உடுப்பு ஆகவும் மாறுபடும்.

2

மதிப்பீட்டின் மாறுபாடு

பேரத்தில் எப்போதும் ஒரு கோடி அதாவது ஒரு சரக்குப் பயன் மதிப்பாக இல்லாமல் விலை மதிப்பு அல்லது மதிப்பீடாகவே இருக்கும்.

சமூகத்தில் பேர மதிப்பில் பல சரக்குகள் சரிசம நிலை பெறும்போது, பேர வடிவம் இரண்டு சரக்குகளுடன் நில்லாமல் எல்லாச் சரக்குகளுக்கும் பரவுகிறது.எடுத்துக்காட்டாக இருபது முழம் துணி. ஒர் உடுப்புடன் மட்டுமன்றி,10 கல் எடை தேயிலை, 40 கல் எடை காப்பிக்கொட்டை, ஒரு மரக்கால் கோதுமை, 2 அவுன்சு தங்கம், '/, டன் இரும்பு ஆகியவற்றுக்கு ஈடாகக் கருதப்படலாம்.

2

எல்லாருக்கும் பொதுவாகப் பயன்மதிப்புடைய ஏதாவது ஒரு பொருள் இங்கே பயன்மதிப்பாகக் கருதப்படாமல் விலை மதிப்பாகவே எல்லாராலும் கருதப்பட நேரலாம். துணி அத்தகைய பொது மதிப்பீட்டுப் பொருள் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது விற்பவர்கள் எல்லாம் சரக்கைக் கொடுத்து அதற்கேற்ற அளவு துணியைப்

அளவு