உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

||--

அப்பாத்துரையம் - 45

பெறுவார்கள். சரக்கு வாங்குபவர்களும் சரக்குக்கேற்ற அளவு துணி கொடுத்து அச்சரக்குகளைப் பெறுவார்கள். பண்ட மாற்றுக்காக இங்ஙனம் பயன்படும் துணி, மதிப்பீட்டுப் பொருளாக கருதப்படும். ஆனால் யாராவது இத்துணியைப் பயன்படுத்தினால் அவர்களுக்கு அது பயன்மதிப்பாகிவிடும். அதனுடன் அது தன் விலை மதிப்பை இழந்துவிடுகிறது.

பொன் நகையில், பொன்னைப் பயன்படுத்துபவன் நகையைப் பயன் படுத்த முடியாது. நகையைப் பயன்படுத்துபவன் பொன்னைப் பயன்படுத்த முடியாது. இது போலவேதான் மதிப்பீடாக வழங்கும் பொருளைப் பயன் படுத்தினால், அது மதிப்பீடாகப் பயன்பட முடியாது. மதிப்பீடாகப் பயன்படுத் தினால், பயன் மதிப்பாக அது உதவமுடியாது. அத்துடன் மரயானையை மரமாக எண்ணுபவன் யானையை மறந்து விடுவான். அதை யானையாக எண்ணுபவன் மரத்தை மறந்துவிடுவான். அதுபோலவே ஒருபொருளை மதிப்பீடாகக் கருதும்போதும், பயன் மறந்துவிடும். ஆனால் இம்மறைவு தற்காலிகமானதே. சில சமயம் அது நீடித்திருக்கலாம். ஆனால் இது நிலையாயிருப்பதில்லை.

மதிப்பீடு இங்ஙனம் பொருளிலோ, பொருள் வடிவிலோ இல்லை. மனத்திலும், மனத்திலுள்ள கற்பனை வடிவிலுமே இருக்கிறது. பயன்மதிப்பு மறக்கப்படும்போதன்றி, அது அக்கற்பனை வடிவம் பெறுவதில்லை. மதிப்பீட்டுப் பொருள் இக்கற்பனை மதிப்பீட்டளவின் புறச்சின்னமாகவே இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட காலச் சமூக வாழ்வில் அல்லது காலத்தில் துணியோ, வேறு ஏதேனும் ஒரு பொருளோ மதிப்பீட்டுச் சின்னமா யிருந்திருக்கக்கூடும்.

ஒரு

காலத்தில் ஓரொரு பகுதியில் ஆடுமாடுக மதிப்பீட்டுச் சின்னமாயிருந்தன.பணம் என்பதற்கான இலத்தீனச் சொல் (பெக்கூனியா: பெக்கு = பசு) இதைச் சுட்டிக்காட்டுகிறது. சென்ற ஆயிர ஆண்டுகளுக்கு மேலாக உலகில் பொன்னும் வெள்ளியும் இத்தகைய மதிப்பீட்டுச் சின்னங்கள் ஆகியுள்ளன. ‘பணம்' என்ற மாயச் சொல்லில் அம்மதிப்பீட்டுச் சின்னங்கள்