உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

13

மறைந்திருக்கின்றன. அச்சொல்லின் மாயக் கவர்ச்சியினால் அவையும் பிற பொருள்களைப் போலப் பயன் மதிப்புடை யவைகளே என்பது மறக்கப்பட்டு விடுகிறது.

பொன்னும் வெள்ளியும் நாணய உருவம் பெற்று மதிப்பீட்டுச் சின்னங்களானபின், மதிப்பீட்டளவு பண அளவாகிவிட்டது. சரக்குகளின் சிலை மதிப்பீட்டளவு விலை ஆகிவிட்டது.ஆனால் மதிப்பீட்டின் உண்மையான சின்னமாக விலை எப்போதும் இருப்பதில்லை. விலை மதிப்பு மாறாம லிருக்கும்போதுகூட, பொன் வெள்ளி ஆகியவற்றின் பயன் மதிப்பில் உயர்வு தாழ்வு ஏற்படும்போது, விலை உயர்ந்து தாழ்ந்து மாறுபாடு காட்டுகின்றது. இதனால் உண்மையான விலைமதிப்பு உயர்வு தாழ்வு எது? பயன்மதிப்புக் காரணமான உயர்வு தாழ்வு எது? என்று தெரிய முடியாதபடி பொருளியல் துறையில் அடிக்கடி குளறுபடி எழுகின்றது.

விலை இங்ஙனம் உண்மையான விலைமதிப்பா யியங்கவில்லை என்றும், சமூகக் கற்பனையான விலைமதிப்பே உண்மையான மதிப்பீடு என்றும் காண்கிறோம். மதிப்பீட்டின் சின்னமாக அமையும் நாணயவிலை ஓரளவு அதன் போலிச் சின்னமே. ஏனெனில் பொருள்களின் விலை மதிப்பால் உயர்வு தாழ்வு ஏற்படாத இடங்களில்கூடச் சிலசமயம் அத்தகைய உயர்வு தாழ்வு ஏற்பட்டதுபோன்ற தோற்றம் விலையுயர்வு தாழ்வு காரணமாக உண்டாக இடம் ஏற்படுகின்றது.

மதிப்பீட்டுப் பொருள்

பணம் இங்ஙனம் மதிப்பீடு குறிக்கும் சின்னமாயினும், அடிக்கடி அம் மதிப்பீட்டுப் பண்பை நம் கண்களிலிருந்து மறைக்கும் சின்னமாய், அடிக்கடி அதன் அளவைத் தெளிவாகக் காட்டாத சின்னமாய் இயங்குகிறது. பண்டை எகிப்தியரின் சித்திர எழுத்துக்கள்போல், அது நமக்கு மருட்சி தரும் மாயப் சி புதிராய் விளங்குகிறது. அம்மாயத் தோற்றத்தின் அளவிலேயே பாமர மக்கள் நின்று விடுகின்றனர். முதலாளித்துவ அறிஞர்கூட, இவ் வெல்லை கடந்த அதன் சமூகக் கற்பனைத் திட்டத்தைக் காணவோ, கண்டபோதும் அதன் தன்மையை உள்ள வாற்றியவோ முனைவதில்லை.