உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

அப்பாத்துரையம் - 45

விலை சமூகக் கற்பனையான விலைமதிப்பீட்டின் சின்னமாய் இருப்பதுபோலவே அக் கற்பனை மதிப்பீடும் மற்றொரு மூலப்பொருள் அளவையின் சின்னமாகவே அமைகிறது. அம் மூலப்பொருள் சமூகத்தின் உறுப்பினனான தனிமனிதன் உழைப்பே. அது சமூகச் சூழ்நிலைகளுக்கேற்ப, சமூக ஒப்புதலை எதிர்பார்த்தே செய்யப்படுகிறது. ஆகவே சமூகத்தின் பொது விருப்புவெறுப்புக்கள் அதை எப்போதும் கட்டுப்படுத்தி இயக்குகின்றன.

பணம் என்ற ஒன்று மனித சமுதாயத்தில் தோன்றி மதிப்பீட்டின் உண்மையியல்பை' மறைக்கத் தொடங்கியபின், சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகள் மிகப் பல. இவற்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வொட்டாமல் பணத் திரை அதை மறைக்கிறது.பணத்தைக் கொண்டு மக்களைப் பகடையாக வைத்து ஆடும் ஒரு சில சமூக உறுப்பினருக்கு இத்திரை பலவகையில் சாதகமாயுள்ளது. ஆனால் அதேசமயம் சரக்குகளை உண்டுபண்ணுபவராகவும் பயன்படுத்துபவராகவும் இரு

திறங்களிலும் செயலாற்றுபவர்களான மிகப்

பெரும்பாலான உலக

மக்களுக்கு, அத்திரை வரவரப் பாதகமாகிக்கொண்டே வருகிறது. ஏனெனில் அத்திரை பல தீமையாட்சிகளையும் மடமையாட்சி களையும் நிலைக்கவைத்து, மக்களை அவற்றின்மீது நம்பிக்கை கொள்ளத் தூண்டுகிறது. பணமே மதிப்பீடு என்ற எண்ணம் காரணமாக, பொருளியல் துறையிலும் சமூக அமைப்பு முறையிலும் மக்கள் சிந்தனை செய்ய விடாமல் பணத்திரை தடுத்து, அவர்களுக்குத் தவறான வழியைக் காட்டுகிறது.

எடுத்துக்காட்டாக, தொழிலாளியின் உழைப்பைவிட முதலாளி அவனுக்குத் தரும் கூலிப்பணமே உண்மையான செல்வம் என்ற எண்ணத்தை அது மக்களிடையே பரப்புகிறது. உழைப்பின் மதிப்பைவிடக் கூலியின் மதிப்பு மிகவும் குறைவு என்பதை அது மறைத்து விடுகிறது.

இதுபோலவே, ஒரு மடாதிபதி தன் பக்தனுக்குச் செய்யும் ஆசீர்வாதத்தைவிட, மடாதிபதிக்கு அந்த பக்தி அடிமை வரியாகவோ, காணிக்கையாகவோ அளிக்கும் பணம் எத்தனையோ மடங்கு உண்மையான பயன்மதிப்பு உடையது