உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

15

என்பதைப் பக்தன் சிந்தனை செய்யவிடாமல் அத்திரை அவன் கருத்தை மழுங்க வைக்கிறது.

சரக்குகள் மதிப்புடைய முத்தும் வைரமும், பொன்னும் மணியும் போல, சமூகத்தில் மதிப்புக்கு உரியவர்கள் எனக் குறிப்பிடத்தக்கவர்கள் அதன் செல்வரல்லர்: முத்தைக் கடலிலிருந்தும், வைரத்தைப் பாறைகளிலிருந்தும், பொன் வள்ளியை அடி நிலத்திலிருந்தும் எடுத்து உலகுக்கு அளிப்பவர்களே, இத்தகையோர் உழைப்புக்கும் மதிப்பு அளிக்கும் மூல உழைப்பாளிகள். உணவுப் பொருள்களையும் மூலப் பொருள்களையும் நிலப்பரப்பிலிருந்து பயிராக்குபவர் களும்; தம் உடலுழைப்பிலிருந்தும், மூளையுழைப்பிலிருந்தும், தம் வாழ்க்கைத் தரத்தின் மலர்ச்சியிலிருந்தும் சரக்குகளை உருவாக்குபவர்களுமே யாவர். இம் மெய்மைகளைப் பணத்தின் மாயத்திரை மறைக்கிறது.

மேலும் பணம் உழைப்புக்கும், மதிப்பீட்டுக்கும் சின்னமாக ஏற்பட்ட ஒன்றே. ஆனால் சமூக அமைப்பு முறையிலுள்ள கோளாறுகள் காரணமாக சமூக உழைப்பற்ற பலவகை மாய மதிப்பீடுகளுக்கு அடிப் படையாகவும் அது இயங்க முடிகிறது. உழைப்புடனும், உழைப்பின் பயனாக ஏற்படும் சரக்கு களுடனும் தொடர்பற்ற எத்தனையோ பண்புகளுக்கு அது சின்னமாகி விடுகின்றது. மனச்சான்று, தன் மதிப்பு ஆகிய விலைமதிப்பற்ற பண்புகள்கூட விற்பனைக்களத்தில் விலை கூறத்தக்க பொருள் களாகி விடுவதுண்டு. மக்கள் வறுமை, பணஆசை, அடிமைத் தனம், தன்னலம், ஆடவர் சிற்றின்ப வேட்கை, பெண்டிர் கற்பு ஆகியவற்றை முதலீடாக்கிப் பணமீட்டுபவரும், மனித இனத்தில் இல்லாமலில்லை. திருட்டும் கொள்ளை யும் வழிப்பறியும்கூடப் பணத்தின் சமூக மதிப்பைக் கடந்த பொருளீட்டும் துறைகளே யாகும்.

ன்று மதிப்பீட்டுச் சின்னமாக வழங்கும் பொருள் களிடையே பொன்னும் வெள்ளியும் முக்கியமானவை. ஆனால் இத்தகைய பொருள்களிடையே 'மனிதனும்’ ஒரு பொருளாயிருந்ததுண்டு என்பதை நாம் மறப்பதற்கில்லை. பண்டையுலகில் அடிமைகள் பணமாகக் கருதப்பட்டனர். மேனாட்டிலும் 18ஆம் நூற்றாண்டுவரை அடிமைகள் செல்வ