உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

|--

அப்பாத்துரையம் - 45

மீட்டும் செல்வமாகப் பயன்படுத்தப்பட்டனர்

கவனிக்கத்தக்கது.

பணத்தின் திருகுதாளம்

என்பது

இங்ஙனம் பணம் உண்மையான மதிப்பீட்டை மறைக்கும் ஒரு மாயத்திரை என்பதை அடிப்படையாகக் கொண்டு சிறு முதலாளிகள் சார்பாக எழுந்த பசப்புச் சமதர்மவாதிகள் சிலர் பணத்தையே அகற்றி அதனிடமாக உழைப்புச் சீட்டையோ, உழைப்பின் பயனாக நூல் சிட்டம் முதலிய பொருள்களையோ வழங்கத் திட்டமிடுகின்றனர். இது பொருளின் பெயரை அல்லது வடிவத்தை மாற்றுவதால் பொருள் மாறிவிடும் என்று கருதும் பேதமையேயாகும். ஏனெனில் அவர்கள் ஒழிக்க நினைக்கும் பணத்தின் சின்னமாக இவை நிலவக்கூடுமேயன்றி, உழைப்பு மதிப்பின் சின்னமாக முடியாது. உழைப்புக் கூலியின் குறைபாட்டைத் தவிர்க்கப் பயன்படக்கூடும் என்று நாம் எதிர்பார்க்கவும் முடியாது. அங்ஙனம் எதிர்பார்ப்பது மடாதிபதியை ஒழித்து மடத்தை ஏற்றுக்கொண்ட செயல் போன்றதேயாகும். அநீதியின் பெயரை மாற்றிவிட்டதால், அநீதி நீதியாய் விடமாட்டாது.

ம்

பணத்தின் மாயத்திரையை நீக்க முனைபவர் உண்மைப் பணம் யாது என்றும், அதற்கும் உழைப்புக்கும் உள்ள தொடர்புகள் யாவை என்றும் உண்மையான மதிப்பீட்டை அது எங்ஙனம் மறைக்கிறது என்றும் ஆராய வேண்டும்.

பண்டமாற்று நிலையில், வாங்குகிறவன் வாங்குகிறவனாக மட்டுமல்ல. அவனே கொடுப்பவனாகவும் இருக்கிறான். ஒரு பொருளை வாங்கி, மற்றொரு பொருளைக் கொடுக்கிறான். அதுபோலவே கொடுக்கிறவன் கொடுக்கிறவனாக மட்டுமில்லை; வாங்குகிறவனாகவும் இருக்கிறான்: ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளை வாங்குகிறான். 20 முழம் துணி =ஓர் உடுப்பு என்ற பேரத்தில் ஏ-20 முழம் துணியைக் கொடுக்கிறான். அது அவன் விலைமதிப்பாகவே பயன்படுகிறது. ஓர் உடுப்பு அவன் வாங்கும் பொருள். அதுவே அவன் பயன்மதிப்புப் பொருள். பி- ஒர் உடுப்பைக் கொடுக்கிறான். அது அவன் விலைமதிப்பு. 20