வருங்காலத் தலைவர்கட்கு
189
இவையே பெரியார் நமக்கு அறிவுறுத்த வேண்டிய செயல்களாக உள்ளன. அண்டை யலாரை நேசிக்கும்படி ஒருவர் கூறினால், அது இன்னும் ஒருபடி உயரிய ஒழுக்கமுறை என்று கூறுவோம். ஆல் பகைவரை, நம்மையோ, நமக்கு இன்னும் யாரையோ கொன்றொழிப்பவரை நேசியுங்கள் என்று கூறிய இயேசுவின் வாசகம் நம்மால் எளிதில் உணரக்கூடியது மன்று; ஏற்றுக் கொள்ளக்கூடியதுமன்று; பலரால் சரியெனக் கொள்ளக் கூடியதுமன்று. அது முடியாத ஒரு செயல் என்று மட்டிலும் எவரும் கூறிவிடலாகும். ஆனால் இயேசுபிரான் அங்ஙனம் செய்தே காட்டினார். தம்மைப் பின்பற்றிய சீடர் தம்மைப் பகைத்தழிக்க முற்பட்ட புரோகிதக் குருமார் (பரிசேயர்கள்), தம்மைக் காட்டிக் கொடுக்கத் துணிந்த யூதாஸ் ஆகிய எல்லாரையும் அவர் ஒரே கண்கொண்டு பார்த்து ஒரே நிலையில் சாகுந் தறுவாயிலும் நேசித்தார். அவர் நெஞ்சகம், அத்தனை விரிவுடையது. அவர் அறிவு அதற்கிணையான உயர்வும், அலமும், நுண்மையும் உடையது என்று கட்டாயம் நம்பலாம்!
நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் ஆண்ட மன்னர் எத்தனையோ பேர், அவர்களில் போர்வெற்றியால் புகழ் படைத்தோர், தோலாவறிவீரர் எத்தனையோ பேர். ஸீஸர், அலெக்ஸாண்டர், நெப்போலியன் முதலியோர் இவர்களினும் தலைசிறந்தவர்கள். ஆனால் இப்பேரரசரை விட உலகம் ஒரு ஆல்ஃபிரடை, ஒரு கிராம்வெலை, ஒரு வாய்விடா வில்லிய’த்தை (William the Silent) எவ்வளவு உயர்வுடையவராகக் கொண்டுள்ளது! இது ஏன் தெரியுமா? இவர்கள் வெற்றி தம் புகழ், தம் ஆற்றல் பெருக்கிய வெற்றிகள் அல்ல; தம் நாட்டவ் நல்வாழ்வில்அக்கரை கொண்டு பெறப்பட்ட அன்பு வெற்றிகள் ஆகும். மன்னரே யல்லாது மன் மக்களிடையே கூட ஒரு ஜோன் ஆவ் ஆர்க், ஒரு காதரீன் மோம்பஸான், ஒரு பிளாரென்ஸ் நைட்டிங்கேல், ஒரு பால், ஒரு நெல்ஸன், ஒரு மீகாமன் ஓட்ஸ் ஆகியவர்கள் மக்களின் மனத்தில் எத்தனை ஆழமாகப் பதிந்துள்ளனர்? மன்னரை மறந்தபோதும் உலகம் அவர்களை மறவாது. அத்துடன் மன்னராளும் அரசெல்லையாயினும் இவ் வருண்மன்னர் புகழாட்சியின் எல்லை எத்தனையோ பரப்பும் இனிமையும் நீடித்த நிலையும் உடையது. இயேசு பிரானொத்த அருள்நிறை பெரியார்களே இவ்வருண் மன்னரின் மன்னராவர். உலகில்