இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
190 ||
||---
அப்பாத்துரையம் - 46
பொது மனிதர் வாழ்வின் பரப்பைட் தடைப்படுத்தும் வகுப்பு. இன நாட்டு எல்லை கடந்து ஒரு தனிப் பேருலகம் அமையும் காலம் வருமானால், அன்றைய உலகம் இந்நாளைய உலகத்தைவிட இப் பீடுசால் பெரியாரின் தொலை நோக்கினை முழுதுற உணரக்கூடும். வலிமையால் சிறுதிறப் பேரரசமைத்துப் பேரரசர் பலர் எழுந்து எழுந்து நலியும் இவ்வுலகில், அன்புப் படையால் உலகெலாம் ஒன்றுபடுத்த முடியும் என்று இப் பெரியார்கள் காட்டி வழிவகுத்துள்ளனர். இன்றைய மக்களுலகம் அவர்களைப் போற்ற மட்டுமே ஆற்றலுடையது. அவ்வழி நின்ற உலகை அன்பாற் பிணைத்து ஓருலகாக்கும் நிலை வர நாம் இன்னும் பன்னூறாண்டு காத்திருக்க வேண்டி வரலாம்!
உன்போன்ற
வீரவாழ்க்கைக் கனவார்வலர் கனவார்வங்கள் உயர உயர உங்கள் கற்பனைகளும் கற்பனை வீரரும் உயர உயர, அத்தொலைநாளைய கனவுலகம் நம்மை அணுகி வருவது உறுதி.