உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 165

செய்தனர். மெய்யான ஊடு நூலுடன் பொய்யான பாவு நூலிழைத்து, அவர்கள் திரை இயற்றினர். அத்திரையிலே விடுதலையின் வீரத்திருவுரு வேட்டைக் காட்டின் வெங்கொடுமைப் பேருருவாகக் காட்சி தந்தது.

இம்மாறாட்டத் திரை அகற்றி, ஹைதர் வாழ்வின் பாரதீர உருவில் நாம் கருத்துச் செலுத்தவேண்டும்.

விடுதலைப் பயிர் வளர்க்க முனையும் நமக்கு, அவ்விடுதலை இயக்கத்தின் நாற்றுப் பண்ணைக்கே வித்தும் உரமுமிட்ட வீரவாழ்வு ஒரு நல்ல வழிகாட்டியாதல் ஒருதலை. நமக்கும் நம் பின்னோர்களுக்கும் அது நற்பயனூட்டும் பண்புடையதாய் அமையும் என்பதும் உறுதி.