பக்கம்:அமர வேதனை.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாரத புத்திரரே!

அன்று போல்
இன்றும் வாழ்கிறீர்
ஹே, பாரத புத்திரரே!
என்று நீர் விழிப்புறுவீர்
ராமன் ஆண்டாபிலன்,
ராவணன் ஆண்டாலென்,
எவன் எப்படிப் போனாலென்
என்றிருந்தீர் அன்று!

உம் தலைமீதேறி
உயர்ந்தனர் மன்னர்!
உல்லாச வாழ்வில்
மிதந்தனர் களித்தனர்!
படை எடுத்து வந்த
பலப்பல இனத்தினர்
கொள்ளையிட்டுச் சென்றோடினர்.
கடல் கடந்து வந்த
அந்நியர் ஆளும் இனத்தவர்
யாமே என்று
கொடி கட்டி வாழ்ந்தனர்
உம்மை சுரண்டினர்!

சுதந்திரம் வந்தது;
சுகம் தான் வந்ததோ?
உம்மை சேர்ந்தோரே
உம் பேர் சொல்லி
தாம் உயர வகை கண்டனர்.

வல்லிக்கண்ணன்

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/11&oldid=1278916" இருந்து மீள்விக்கப்பட்டது