உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முடிவா முக்கியம்?

உலகில்
எத்தனை மனிதர்கள்!—
எத்தனை,எத்தனை
ஆண்கள்,பெண்கள்!—
அத்தனை பேருக்கும்
ஒரே முடிவு!
செத்தே தொலைவர்
அத்தனை அத்தனை மனிதரும்!

உலகில்
வாழும் வகைகள் எத்தனை?
எத்தனை எத்தனை
மனிதர் உளரோ
அத்தனை,அத்தனை
வாழ்க்கை முறைகள்!
ஒவ்வொரு நபரின்
வாழ்க்கை வழியும்
தனித்தனி விதமாம்!

எனவே,
உலகில்
எப்படி முடிந்தார்
என்பதா முக்கியம்?
எப்படி வாழ்ந்தார், வாழ்கிறார்
என்பதே பெரிதாம்.

1968

30

அமர வேதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/32&oldid=1896351" இலிருந்து மீள்விக்கப்பட்டது