உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவிறிடும்
ஊற்றுச் சிரிப்பு
சிறு குருவிகள் போலே
ஆட்டமும் குதிப்பும்
ஓட்டமும் துள்ளலும்
கொண்டு,
மலரின் ஒளியாய்
இசையின் ஒலியாய்
திகழும் குழந்தைகள்
இயல்பை
பெரியவர்
இரவல் பெற்றிடின்
நன்றேயாகும்
என்று
என்னுளம் கருதும்.

1970

வல்லிக்கண்ணன்

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/31&oldid=1896093" இலிருந்து மீள்விக்கப்பட்டது