பக்கம்:அமர வேதனை.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
'எக்ஸ்'?

அறியாப் பொருளே

'எக்ஸ்'எனக் கொள்வோம்

என்றே கூறும் கணிதம்.

வாழ்க்கையில்

மனிதன் தேடும்

எக்ஸ் தான் என்ன?


பணமே எக்ஸ்

என்பது பலப்பலர் தீர்ப்பு.

புகழே எக்ஸ்

என்பர் சிலரேயல்லர்.

எக்ஸ் என்பது

இன்பமே யாகும்;

பணம்,புகழ்,பதவி,பட்டம்,

சொத்து,சுகம்,சோம்பல்,அமைதி,

ஸெக்ஸ்,ஆனந்தம்

எக்ஸ் என்று

எதெதையோ விடையாய்

கணக்கிடும் மனிதர் கூட்டம்!


வாழ்க்கைக் கணக்கின்

விடைதான் என்ன?

கணக்கைக் கொடுத்த

வாத்தியைக் காணோம்.

தெளிவுபெற முயன்றோர்

விளைப்பது குழப்பம்.

50
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/52&oldid=1191019" இருந்து மீள்விக்கப்பட்டது