உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பெண்ணின் கண்கள்

ஏக்கத்தைத் தேக்கிக் காட்டும்
உன் கண்களில்
ஏதேனும் மாயமந்திரங்கள்
உண்டோ பெண்ணே?
உன் பார்வையில்
சொக்குப் பொடி ஏதேனும்
உண்டோ பெண்ணே?

கண்கள்—
பெண்ணின் கண்கள்—
அழுகையிலும் சிரிப்பிலும்
ஏக்கக் குளங்களாய்,
அல்லது ஆனந்த ஊற்றுக்களாய்,
வேதனைப் பொறிகளாய்
அல்லது வியப்பின் சுடர்களாய்;
கோபத்தின் கனலாய்
அல்லது ஆசையின் நிலவாய்
எப்படித் திகழினும்
வனப்பின் களமாகவும்
வசியக் காந்தமாகவும் மன்றோ
மின்னுகின்றன!

1962

வல்லிக்கண்ணன்

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/53&oldid=1896047" இலிருந்து மீள்விக்கப்பட்டது