பக்கம்:அமர வேதனை.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விஷமும் மாற்றும்

வாழ்க்கை விஷம் தானா?

மரணம் அதற்கொரு மாற்றோ?

வாழ்க்கை விஷம்,

மரணமே மாற்றென்று

ஒரு கவிஞன் ஓதுகின்றான்.


சாவு துயிலாமோ?

பிறப்பும் விழிப்பேயோ?

தூங்குவது போலும் சாக்காடு

தூங்கி விழிப்பது போலும் பிறப்பென்று

ஒரு அறிஞன் கூறுகின்றான்.


பிழைக்கிற பிள்ளைக்கு

பிச்சிப்பூ நஞ்சா?

சாகத் துணிந்தவனுக்கு

சமுத்திரம் முழங்கால் மட்டு!

எவனெவனோ

எப்பெப்பவோ

சொன்ன பேச்சுக்கள் தான்!


நஞ்சு உண்டவன்

நெஞ்சு அடைக்குமுன்

கண்டத்தில் நிறுத்தினான் அதை!

கண்டனாகு மாறு!

உண்ணும் நஞ்சும் அமுதமாகும்


வல்லிக்கண்ணன்
59
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/61&oldid=1205050" இருந்து மீள்விக்கப்பட்டது