பக்கம்:அமிர்தம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீரப்பனுக்குத் திடீரென்று வடிவழகியின் பேரில் இவ்விதம் அவளைப் புறக்கணிக்கும் ரீதியில் வெறுப்பு ஏற்படக் காரணம்?

புதிர் ஒன்றுமில்லை.

வடிவழகி எழுத்து வாசனை கிஞ்சித்தேனும் அறியாதவள் என்பது ஒன்றே குறை. அந்த வட்டாரதத்திற்குள் நாலுந் தெரிந்தவன் வீரப்பன். உலக சமாச்சாரம், அரசியல் சேதி இப்படிப்பட்ட செய்தி எல்லாம் அவன் சொல்லித் தான் மற்றவர்கட்குப் புரியும். ஆகக்கூடி, ஊாரா்களுக்கு, வீரப்பனிடம் தனித்த ஈடுபாடும், விசுவாசமும் உண்டான்தில் ஆச்சரியம் எதுவுமில்லையல்லவா?

நாள் ஆக ஆக-அதாவது சுயஅறிவு அவன் வாழ்விற்கு ஒளிபரப்பி வழிகாட்டும் நிலையில், தன்னுடைய எதிர்கால் இல்லற வாழ்க்கைத் துணை குறித்து வீரப்பன் அடிக்கடி ஆலோசித்துப் பார்க்கலானன். அப்போது தனக்காகப் பரிசம் போட்டிருக்கும் வடிவழகியின் குறைபாடு அவனுக்குப் புலப்பட்டது. வருங்காலம் வனப்புக்கொண்டு விளங்க கைதொடும் மனையாட்டி அழகுடன் ஒரளவு கல்வியறிவுள்ளவளாக இருக்கவேண்டும்; அப்படி அமைந்தாலே தன்னுடன் இணைந்து வாழ்க்கை நடத்தமுடியும் என்பது வீரப்பன் லட்சியம். ஆனால் அவனுக்காகக் காத்திருக்கும் வடிவழகி அவன் லட்சியத்துக்கு எங்ஙனம் ஈடுகொடுக்க முடியும்? அவள் எழுத்தறிவற்றவளாயிற்றே!

ஆனால் குற்றம் அவள்மேல்தான்!

“வடிவு, கொஞ்சமானும் படித்துக் கொண்டாத் தான் தேவலாம்’ என்பதாகச் சமயம் வாய்க்கும்போதெல்லாம் அவளிடம் நேரில் பலமுறை வீரப்பன் எச்சரித்தும்,அவள் அவன் சொற்களைச் செவிமடுக்கவில்லை.

கடைசியில் ஒருகாள். தேவையில் யாருக்கும் தெரியாமல் வீரப்பன் ஊரைவிட்டு மறைந்துவிட்டான். கல்யாணமும் தடைப்பட்டது. வடிவு தீயிலிட்ட மெழுகென

34
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/34&oldid=1196126" இலிருந்து மீள்விக்கப்பட்டது