பக்கம்:அமிர்தம்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டிருந்த அவன், காவிரிக் க்சைக்குச் சென்றா லாகிலும் மன திற்குச் சிறிது சாத்தி பிறக்குமே என எண்ணி, அங்கு சென்றான்.

அப்பொழுது இருள் லேசாகப் பட ஆரம்பித்தது. கொங்கும் துணையுமாசு ஆரோகணித்துச் சென்றுகொண் டிருந்த காவிரியின் அழகிலே லயித்திருந்த கந்தன், இடுப்பில் செருகியிருந்த குழலை எடுத்து ஊத ஆரம்பித் தான். குழவின் இன்பதேம் இளங்காற்றில் மிதந்து சென்றது. அலைபுரண்டோடும் வெள்ளத்தின் இனிய சலசலப்பு அச்சமயம் அவன் எழுப்பிய உயிர்காதத்திற்குச் சுருதி கூட்டுவதுபோலிருந்தது.

திடீரென அவனது குழலிசை தடைப்பட்டது. நீரின் சலசலப்புக் கேட்டுத் திரும்பினுன். அந்த இருட்டு வேளையில் நீரினுள் இறங்கும் உருவம் ஒன்றின் கிழல் தென்பட்டது. விசித்தெழுந்து ஒடிச் சென்றான். நீரில் இறங்கிய உருவம் அப்போது தோன்றி மறைந்த மின்ைெளியில் நன்கு தெரிந்ததும், அப்படியே அவன் பிரமித்துவிட்டான்.

தன் உயிரைப் பணயம் வைத்து ஒற்றைச்சாண் வயிற்றைக் கழுவி மூட, உச்சாணிக் கம்பில் ஏறி வேடிக்கை செய்து முடித்த பின்னர் அன்று தனக்கு இரண்டன மன முவந்தளித்த அதே உருவம்; அவளும் பார்த்தாள். அவள் பார்வையில் துடிப்பின் வேகம் அதிகரித்தது. அவளும் அவன்ே யாரென்று அறிந்துகொண்டாள் என்பது அவளது முகபாவனையிலிருந்து தெரிந்தது. -

இவ்வளவு கும்பிருட்டிலே இண்டியாக அலை பாய்ந்து ஒடும் ஆற்றிலே இறங்கவேண்டிய காரணம் fஅவன் யோசனை செய்தான். . :: ஐயா, இன்னும் ஒரு கண் சிமிட்டுற நாழி களிச்சு நீங்க வந்திருந்தீங்கண்ணு எம்மனசு எம்பிட்டு குளுத்து போயிருக்கும் ‘ ... “ ‘ “. . . . .

அவ்விதம் சா மற்றுப் பேசும் அப் பெண்ணினது வார்த்தைகள் அவனுக்கு வியப்பைக் கொடுத்தன.

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/69&oldid=616846" இருந்து மீள்விக்கப்பட்டது