பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முத்தெழிற் காட்சி கொல்லோ!
மோகன முல்லைப் பாட்டோ !
புத்தெழில் நிலாப் புகுந்து
புறப்படும் கனவும் ஈதோ !
தித்திக்கும் மின்னல் ஆமோ!
தண்டலை மயில்அ ரும்போ !
முத்தமிழ்ச்செல்வா நின்றன்
பாற்கடல் முறல் காட்டாய் !

உன்அன்னை மேனுள் காதல்
உளங்கவர் சிரிப்பை ஈங்காள்
நன்றென்று காதல் கொண்டேன்.
ஐம்புல நலன்க ளெல்லரம்
கொண்டுட்டும் போதும், பின்னைல்
குடிதாங்கி மகிழ்ந்த போதும்
உணமையில் உன்சி ரிப்பைக்
காண்கிலேன் சிரிப்பாய் கண்ணே!

18