பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குடும்பநல் விளக்கை ஏந்தி,
குடித்தன முறையில் வெற்றி
கொடுததிடும் துணைந லங்கள்
ஆயமோ டுறவு கொண்டிங்(கு)
எடுப்பார்கள், பிஞ்சுள் ளத்தில்
இனிவ ரூஉம் வாழ்வில் லத்தை
கொடுப்பவன் ; எடுப்ப வன்நீ!
கொள்கைபோல் சிதையேல் சிற்றில் !

அழகினுக் கழகாய் ஆவி
அள்ளிடும் மாணிக் கப்பொன்
அழலினில் அமுதம் கொட்டி
அமைத்திவண் உவமை இன்றி
சுழன்றுலா பேதைச் சிற்ப
கற்பகத் தோட்டத் துள்ளே
நுழைந்துநீ சிதையேல் சிற்றில்
நொந்திடும் அரும்பு நெஞ்சம் !

30