146
அமுதவல்லி
செல்லாயி நடந்தாள் ; முருகன் எதிர்ப்பட்டான்; நடந்த கதைக்கு வியாக்யானம் கேட்டான்; சொன்னாள்.
‘அக்கா, இதிலே ஏதோ சூது இருக்கு; அவனுக்கு இப்ப கை ரொம்ப எறக்கமாம்; ஊருக்காட்டிலே பேசறாங்க; காய்கறி வாவாரத்திலேயும் ஏகப்பட்ட நஷ்ட மாம்; உன் பணத்தைச் செலவழிச்சிருப்பான்! அதுக்குத்தான் இம்பிட்டுத் தில்லு: மல்லு . கந்தசாமி இப்பத் தான் ஒத்தக்கடை ரோட்டிலே ரேக்ளா வண்டியிலே போறானாம்...! பொட்டிக் கடை ராவுத்தர் சொன்னாரு! ...வருத்தப் படாதே, அக்கா. மணியக்கார ஐயா கிட்டே அந்திக்குக் கண்டு பேசி, இதுக்கு ஒரு வளி செய்யறேன் அதுவரை நம்ப வீட்டிலேயே வந்து படுத்துக்க !’ என்று உரைத்தான் முருகன்.
‘ராவுல கந்தசாமிப் பயல் வயல் காட்டுக்கு காவலுக்குப் போனதும், அவன் ஆட்டை ஒடைச்சு எம் பணத்தை எடுத்துக் கிட்டு ஒடியாந்திட்டா என்னா?’ என்று ஓடிய அந்த ஆலோசனை எங்கே? பொட்டுப் பொழுதுக்கு முந்திப் பிறந்த அந்த வைர நெஞ்சம் எங்கே? -
செல்லாயி சிரித்துக் கொண்டாள்.
“என்னா அக்கா, சிரிக்கிறே?”
“என்னை நெனச்சுச் சிரிக்கிறேன், முருகா!’
எனக்கு ஏதும் புரிமாட்டேங்குது!’ -
அவள் நடந்து சென்று கொண்டிருந்தாள்.