பூவை எஸ். ஆறுமுகம் 169
சோமையா பதறிப்போய், தில்லையை நெருங்கி அவளுடைய கண்ணீரை மன நெகிழ்ச்சியுடன் துடைத்துவிட்டான். ஒரு சமயம், தான் நோயும் பாயுமாக வீழ்ந்ததைக் கண்டு, தில்லை உயிர்க்குலை நடுநடுங்கத் துடித்த துடிப்பின் நேசத்தை அவன். அந்தரங்கம் தான் உய்த்துணர முடியும்!
பூவை அடைந்தது பூ,
பசிக்குமே? சாப்பிட வாங்க!"
“நீ போய் பிளேட்டைக் கழுவி வை. நான் பழசை உடுத்திக்கிட்டு வாரேன். ஆமா, பாபு தூங்கிட்டானா, தில்லை.
“கொஞ்சம் முந்தி அவன் பாட்டுக்கு கள்ளர் சந்து முனையிலே ஒண்டியா நின்னு இருட்டிலே என்னத்தையோ பொறுக்கி விளையாடிக்கிட்டு இருந்தான். தேடிப்போய் அவன் முதுகிலே ஓங்கி நாலு அடி வச்சுத் தூங்கச் செஞ்சேனுங்க, அத்தான் !’
நிதானம் காத்து உரைத்தாள் தில்லை நாயகி.
சோமையாவால் நிதானத்தைக் காக்க இயலவில்லை, மறுகணம் அந்தக் காட்சி மனக் கண்ணில் விளையாடியது; விளையாட்டுக் காட்டியது.
பாபுவுக்கு 'விடேன்-தொடேன்' என்று மூன்று நாள் விஷ ஜூரம் பீடித்தது.
அவ்வளவுதான். -
தில்லை உருகினாள்; உருக்குலைந்தாள். முருகன் படத்தின் முன் மண்டியிட்டு, முருகா, எங்களுக்கு இருக்கிற ஒரேயொரு ஆறுதல் எங்கள் பாபு தான். இனியும் நீ எங்களைச் சோதிக்கிறது. நியாயமாகுமா,