பக்கம்:அமுதவல்லி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



182

அமுதவல்லி

கெடிலாக் கின் பின் ஆசனத்திலிருந்து எழுந்து, கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் வாணி!
உலகம் பொல்லாதது.
காதல் பொல்லாதது!
காதல்’ என்றால் என்ன அர்த்தமாம்?

காதலைத் தொடங்கும் போது ஒருவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான்-முடிக்கும்போது மற்றவர்களை ஏமாற்றுகிறான். இதைத் தான் உலகம் காதல் என்று பெயரிட்டு அழைக்கிறது!’

புரட்டு!

“... காதல் என்பது ஒரு ரப்பர் பலூன். காற்றை நிரப்ப நிரப்ப அது அழகாகத் தோன்றும். நன்றாக உப்பும், ஆனால் அது எப்போது உடையும் என்பது மட்டும் நிச்சயமில்லை!...”

நிஜம் தானா?

காதல் சோம்பேறிகளின் தொழில்; சுறுசுறுப்பு மிக்கவர்களையும் சோம்பேறிகளாக்கி விடும்.

வாஸ்தவந்தானா!

“காதலர் இருவர் பரிமாணமாக அறிந்த பின்,

இருவர் ஆத்மாவும் அறிவும் உடலும் ஒன்று கலந்து மலர்வதுதான் இலட்சியக் காதல். அத்தகைய காதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/184&oldid=1459998" இலிருந்து மீள்விக்கப்பட்டது