பக்கம்:அமுதவல்லி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பூவை எஸ். ஆறுமுகம்

185

அவள் படித்திருந்தாள். ஒரு பெண் தன் புருஷனை வசீகரிப்பதில் தாசியாகத் தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும்’ என்பதை.

அவன், அவளுள் இரண்டறக் கலந்தான்.

என்றோ ஒரு நாள், தாரா வந்தாள். உருவம் தெரிந்தது; திகைத் தான். முதற் காதல் கண்ணிர் விட்டது. அவள் வேலை வேண்டுமென்றாள். ஸ்டெனோ டைப்பிஸ்ட் ஆனாள். ஆபிஸ் வியவ காரங்கள் எல்லையிலேயே சுபம் கூறின.

அன்றைக்கு அழகி தாரா வின் மோதிரமும் முகுந்தனின் கைக் கடிகாரமும் கைகுலுக்கிக் கொண்ட போது-? ஒரு சில கணப் பெருழுதிலே, ஒரு பெண் நீண்ட காலத்திய உணர்ச்சிமயமான வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும். தாராவுக்கென்று-முகுந் தனுக்கென்று எழுதப்பட்ட எழுத்தா?- தாரா ஏன் விம்மினள் ? - உணர்ச்சிவசப் பட்டவர்களுக்கு வாழ்வு ஒரு சோக நாடகமா?

அன்று, திட்டமிட்டிருந்த திரைப் படத்திற்குத் தன் உயிரின் மறு பாதியை அவன் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்வதற்குள், அவன் பட்ட பாடு சொல்லத் தரமல்லவே?- ‘வாணி, மனம் சலன மடைந்த தென்னவோ வாஸ்தவந்தான். ஆனால், நான் உன்னுடைய உரிமை என்பதை ஒரு போதும் மறக்க மாட்டேன். நான் உன்னை விட்டு ஒரு நாளும் பறி போக மாட்டேன். என்னை நம்பு, கண்ணே! இது ஆணை !’

அன்பு பயம் செறிந்தது.

அ-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/187&oldid=1460001" இலிருந்து மீள்விக்கப்பட்டது