பக்கம்:அமுதவல்லி.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது186

அமுதவல்லி

வாழ்க்கை பயம் செறிந்தது.

வாணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. நோய்க்குப் பெயர் வைக்க டாக்டருக்கு ஆள் போயிருந்தான். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது முகுந்தனுக்கு. அழவேண்டும் போலிருந்தது. வாணியின் தங்க மேனியில் நெருப்பு மூட்டம் போடப்பட்டிருந்தது. பத்திரை மாற்றுத் தங்கம் உருகி வழிந்தோடிக் கொண்டிருந்தது.

காட்டிலிருந்து திரும்பிய ராமர், சீதையைத் தீக் குழியில் இறங்கச் சொல்லி, அவளுடைய புனி தத் தைப் பரீட்சை செய்தாராமே?- வழிநெடுக் கதைத்துக் கொண்டு சென்றவனின் வாய்மொழி அவன் காதுகளை ஏன் முற்றுகையிட வேண்டும்.

“என் வாணி சொக்கத் தங்கம். நான் அவளுக்கு ஏற்ற கணவன் தானா என்பதைப் பரீட்சிக்க அவ ள ல்லவா எனக்குச் சோதனை நடத்தவேணும்?...-- தன்னுள் தனதாக, தானே தானாக-எண்ணமே அவனாக-அவனே எண்ணமாக, மனச் சாட்சியாக, மனிதத் தன்மையாகச் சுழன்றான்; கனன்றான்; கதறினான்.

இடது கையில் கடிகாரம் இழைந்திருந்த இடம் சுட்டது. தீக்குச்சியைக் கிழித்து அந்த இடத்தைப் பொசுக்கிவிடத் தான் துடித் தான். ஆனால், வாணி அவன் மீதல்லவா தன் அன்புப் பார்வையை வலை வீசியவாறிருக்கிறாள்: நோயின் வேதனையை மறக்க முடிந்தது போலும்! - -

பொங்கி வந்தது கண்ணிர். அவன் பார்த்து விட ஒாகாதேயென்று முகுந்தன் எதிர்ச் சுவர்ப்பக்கம் திரும்பிக் கொண்டான். அவர்களது திருமணப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/188&oldid=1460002" இருந்து மீள்விக்கப்பட்டது