பக்கம்:அமுதவல்லி.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது188

அமுத வல்லி

“சரி, நீ ஆபீசுக்கேயா வந்திட்டே?”

“ஆமா என்னத்துக்கு இரட்டிப்பு வேலைன்னு நான் டாக்ளி பிடிச்சு வந்து இறங்கிட்டேன். தம்புச் செட்டித் தெருவுக்கும் மினர் வா வுக்கும் ரொம்பத் துரமா என்ன?... வந்தவள். நம்ப காரிலேயே பின் வீட்டிலே உட்கார்ந்தேன், கூர்கா உங்க கிட்டே சேதி சொல்ல ஓடிவரத் துடிச்சான். உங்களுக்கு ஆபீஸ் நேரத்திலே தொந்தரவு தரக்கூடா தேன்னு தான் இப்படி நடந்து கிட்டேன். நீங்க வந்திங்க: என்னைக் கவனிக்கல்லே சின்ன தமாஷ் ஒண்ணு பண்ணலாம்னு கடுதாசியிலே ஏரோ ப்ளேன் பண்ணி உங்க தலைமேலே பறக்க விட ரெடியாயிருக் கிறப்போ , அந்தப் பொண்ணு வந்து ட்டாங்க. கம்னு அப்படியே நான் உட்கார்ந்திட்டேன். மழை பேஞ்சது. உங்க மனித மனம் ஒத்தாசை செஞ்சது. ஆக, நீங்க ரெண்டு பேரும் மாத்திரம் சாயா சாப் பிட்டிங்க...! ம்! அவங்க மைலாப்பூரிலே இறங்கிட் டாங்க. நம்ப விட்டிலே நீங்க இறங்கினதும், என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டீங்க. நான் மூச்சுக் காட்டாம.கதவைத் திறந்து வெளியே வந்த துந்தான் குரல் கொடுக் கணும்னு பத்துத் தர ம் நினை ச்சிருந் தேன். என் குரல் வரலையானா, பதட்டப்பட்டுப் போ வீங்களேன்னு நான் குரல் தந்துட்டேன். உங்களுக்கு முகம் வெளிறிப் போச்சு. சந்தர்ப்பங்கள் உதயமா கல்லையானா, அப்பால் வாழ்க்கைக்கே பொருள் தெரியாது; புரியாது. அத் தான், நீங்க வினா உடம்பை அலட்டிக்காதீங்க. உடம்புக்கு வந்தா, எனக்குப் பொறுக்காது. எனக்கு இது ஒரு கனவு மாதிரி. தான் எப்பவோ மறந்திட்டேனே?”

டாக்டர் வந்தார். “மிஸ்டர் முகுந்தன்! உங்கள் மனைவிக்கு மன உளைச்சலினால் தான் இந்த ஜூரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/190&oldid=1460004" இருந்து மீள்விக்கப்பட்டது