பக்கம்:அமுதவல்லி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 : 0 அமுதவல்வி

நீ ஆனா, ஒனக்கு மூச்சு மட்டும் உள் வட்டமா அடங்கிப்போச்சு. அதொட்டித்தான் எனக்குத் தெம்பு ஊறிச்சு, சோளத் தட்டைக்குத் தண்ணி கொளுவி பனுக்கிப்புட்டு திரும்பியாந்து பார்த்தேன். நீ கண்ணைத் தொறக்கலே! ஆத்தர மூத்தவளுக்கு மேலைக்கு பள்ளயம் படைக்கிறதா நேர்ந்து கிட்டேன். நொடி கழிச்சு, செவலைகுப் புண்ணாக்கு உடைச்சுப் போட்டு தண்ணி காட்டிப்புட்டு ஒடியாந்தேன். அப்பதி தான் நீ கண்ணு ரெண் டையும் தொறந்து பரிதாபமா முழிச்சுப் பார்த்தே! தெகை தப்பி இருந்திச்சு ஒங்கண்ணுக ஆத்தாடி இப்பத்தான் கொஞ்சத்துக்கு கொஞ்சம் உம் மூஞ்சியிலே களை உண்டாகியிருக்குது!’ என்று அவள் முகத்தைப் பார்க்காமல், சூன்யத்தில் கண் பதித்து, அவள் முகத்தைப்பற்றி வியாக்கியானம் செய்தான் காளியப்பன். பாயின் வட முனையில் பட்டும் படாமலும் அவன் கால்பரவி உட்கார்ந்து கொண்டான்.

“ஆமாம்; எனக்கிண்ணே தான் ஒங்களை இந்தப் புறத்தாலே எஞ் சாதிச்சாமி தட்டி விட்டிருக்க வேணும்!”

இருக்கும், இருக்கும் சனிச்சந்தைக்குப் போயிட்டுத் திரும்பு காலிலே, தானே நானு ஒன்னைக் கண்டுக்கிட வாய்ச்சிது”

“அதே எஞ்சாமி ஓங்களை ஒரு பொட்டுப் பொருளுக்கு முன்னாடியே அங்கணே கூட்டியாந்து விட்டிருந்தாக்க, நானும் தப்பிச்சிருப்பேன்; ஒசந்த மானமும் பொழைச்சிருக்கும். ஐயையோ!... சாமியே இந்தப் பாவத்தை நானு சொமக்கிறத்துக்கு நானு என்ன பாவம் செஞ்சேனோ?... ஆத்தாளே!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/212&oldid=1378245" இலிருந்து மீள்விக்கப்பட்டது